(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் ஆறாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாட முதலாவது அணியாக ஜெவ்னா கிங்ஸ் தகுதிபெற்றுக்கொண்டது.
நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் அணிக்கும் நடப்பு உப சம்பியன் கோல் கெலன்ட்ஸ் அணிக்கும் இடையில் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ் அணி 14 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
காமில் மிஷார குவித்த அபார சதம், கவாஜா நவே, தௌஹித் ஹிர்தோய் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள், மொஹமத் ஷிராஸின் துல்லியமான பந்துவீச்சு என்பன ஜெவ்னா கிங்ஸை வெற்றிபெறச் செய்தன.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களைக் குவித்தது.
அவிஷ்க பெர்னாண்டோ (19) ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 35 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், அதன் பின்னர் காமில் மிஷார, கவாஜா நவே ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 138 ஓட்டங்களைப் பகிர்ந்து ஜெவ்னா கிங்ஸ் அணியைப் பலப்படுத்தினர்.
கவாஜா நவே 54 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
தொடர்நது காமில் மிஷார, தௌஹித் ஹிர்தோய் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
காமில் மிஷார 55 பந்துகளில் 10 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 108 ஓட்டங்களுடனும் தௌஹித் ஹிர்தோய் 21 பந்துகளில் 3 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 54 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

243 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கெலன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
சாமிக்க கருணாரட்ன, தசுன் ஷானக்க ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
இதன் பலனாக 14ஆவது ஓவரில் கோல் கெலன்ட்ஸ் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தது. ஆனால், அடுத்த 4 விக்கெட்கள் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்ததால் கோல் கெலன்ட்ஸ் நெருக்கடிக்குள்ளானது.
தினுர களுப்பஹன, சச்சிந்து கொலம்பகே ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றிக்காக கடுமையாக முயற்சித்தனர். ஆனால் அவர்களால் சாதிக்க முடியாமல் போனது.
துடுப்பாட்டத்தில் சாம் ஹோப் 44 ஓட்டங்களையும் சாமிக்க கருணாரட்ன 39 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க 34 ஓட்டங்களையும் 10ஆம் இலக்க வீரர் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களையும் தினுர களுபஹன ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹமத் ஷிராஸ் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லிஸாட் வில்லியம்ஸ் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகன்: காமில் மிஷார














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM