இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்குப் பங்களிக்கும் வகையில் தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு புதன்கிழமை (5) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான மற்றும் நீண்டகால உறவுகள் குறித்து நீண்ட கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன.
2022 - 2023 ஆம் ஆண்டுகளில் நிலவிய பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஆதரவு, தித்வா அனர்த்தத்தின்போது வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் மற்றும் உட்கட்டமைப்பு புனரமைப்புப் பணிகளில் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு, குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் நாட்டின் வலுசக்தி தேவைகளைப் பூர்த்திசெய்ய வழங்கப்பட்ட பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அதற்காக இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாட்டுக்கு இந்தியாவின் ஆதரவு அவசியமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிராந்திய அச்சுறுத்தலாக மாறியுள்ள சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தால் முகங்கொடுக்க நேரிடும் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் பிராந்திய நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்குப் பங்களிக்கும் வகையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தொழில்நுட்பம், வலுசக்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளுக்கு உட்பட்டு இரு நாடுகளுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பை இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரே குல்கர்னி உள்ளிட்ட பிரதிநிதிகள், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா உட்பட பலர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM