அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'ஒன்ஸ்மோர்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

05 Aug, 2026 | 05:13 PM
image

தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் நிகரற்ற நடிகர் என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கும் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஒன்ஸ்மோர்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேகப் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒன்ஸ்மோர்' திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல், டிராவிட் செல்வம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்... தற்போது இத்திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனிடையே நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான 'கான்சிட்டி' திரைப்படம் வசூல் ரீதியாக பாரிய வெற்றியைப் பெற்றதால், அவர் நடிப்பில் தயாராகியுள்ள 'ஒன்ஸ்மோர்' திரைப்படத்திற்கும் ரசிகர்களிடத்திலும், திரையுலாக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகுடம் - திரைப்பட விமர்சனம்

2026-08-15 16:27:02
news-image

ராகவ் ரங்கநாதன் நடிக்கும் 'பீப் '...

2026-08-15 16:29:50
news-image

துஷ்யந்த் நடித்திருக்கும் 'ஆல் பாஸ்' படத்தின்...

2026-08-15 19:13:44
news-image

அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-08-15 15:43:22
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பாரீஸ் கஃபே'...

2026-08-15 15:45:02
news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-08-13 17:42:03