'தமிழகத்தில் பிறந்த சர்வதேச அளவில் பிரபலமான விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் சுயசரிதை சொல்லப்பட வேண்டிய படைப்பு. இதற்காக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமாரின் அணுகுமுறை எமக்கு மிகவும் பிடித்திருந்தது' என நடிகரும், தயாரிப்பாளருமான மாதவன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், இயக்குநருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஜி டி என்' திரைப்படத்தில் மாதவன், துஷாரா விஜயன், சத்யராஜ், ஜெயராம், வினய் ராய், அதிதி பாலன், தம்பி ராமையா, ஷீலா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரை கலர் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் ஏழாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை வெளியீட்டிற்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் ஜி டி நாயுடு குடும்பத்தின் வாரிசுகளும், அவருடைய அறக்கட்டளையை சார்ந்த பிரதிநிதிகளும் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.
இந் நிகழ்வில் தயாரிப்பாளரும் நடிகருமான மாதவன் பேசுகையில், '' எம்முடைய நீண்ட நாள் நண்பரான ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படத்தின் கதையை கேட்டேன். கேட்டதும் இவரை பற்றிய படங்கள் ஏன் வெளியாகவில்லை? என்ற என ஆச்சரியப்பட்டேன். அத்துடன் இதனை திரைப்படமாக உருவாக்க முடியுமா? என்ற அச்சமும் இருந்தது. ஏனெனில் மிகப்பெரிய உழைப்பும், கூட்டு முயற்சியும் இதற்கு தேவை. இந்த விடயத்தில் ஜிடி நாயுடு குடும்பத்தினரின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் மறக்க முடியாதது. அத்துடன் இப்படத்தை தயாரிக்க ஒப்பு கொண்டதற்கு இயக்குநரின் அணுகுமுறை தான் காரணம். அவர் கதையை ஒலி வடிவில் எமக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிவிட்டார். அதை கேட்டதும் ஒரு முழு திரைப்படத்தையும் ஓடியோ வடிவில் கேட்டது போல் இருந்தது. இது படத்தை தயாரிக்கவும் தூண்டியது. இந்தப் படம் அவசியம் அனைவராலும் பார்த்து பாராட்டப்பட வேண்டிய படம். அவரின் வாழ்க்கையில் இருந்து சொல்லப்படாத பல விடயங்களை இப்படத்தில் காணலாம்'' என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM