எம்மில் சிலர் நாளாந்தம் காலையில் நடை பயிற்சி அல்லது உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போதும் திடீரென்று இதயத்தில் ஒரு அசௌகரிய உணர்வு ஏற்படும். உடனடியாக வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெறும் போது... அது கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் உருவாகும் புற்று நோயாக மாறாத தீங்கற்ற கட்டியால் ஏற்பட்ட பாதிப்பு என அவதானிப்பார்கள். இதற்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மூச்சு திணறல், தலை சுற்றல், மயக்கம், நெஞ்சு வலி, உடல் சோர்வு, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டு.. இதயத்தில் ஏதேனும் அசௌகரியம் உண்டானால்... அது கார்டியாக் மைக்ஸோமா எனும் பாதிப்பாக இருக்கக் கூடும் என அவதானிக்கலாம். மேலும் துல்லியமாக விவரிக்க வேண்டும் என்றால் நேராக படுத்து உறங்கும் போது அல்லது படுத்திருக்கும் போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ... இருமல், படபடப்பு, பக்கவாதத்திற்கான அறிகுறிகள் இருந்தாலோ.. இத்தகைய பாதிப்பு உண்டாகக்கூடும்.
மைக்ஸோமா என்பது இதயத்தில் ஏற்படும் தீங்கற்ற கட்டியாகும். இவை .5 மி. மீ அளவிலிருந்து 6.5 செ.மீ. வரை வளரக்கூடியதாக இருக்கலாம். இத்தகைய கட்டி தடையற்ற அசைவினை கொண்டவை. சில தருணங்களில் இதயம் குருதியை இயல்பான விசையுடன் தள்ளும் போது இவை அசைவு பெற்று, குருதி ஓட்டத்தை தடை செய்யலாம்.
இத்தகைய பாதிப்பை வைத்தியர்கள் எக்கோ கார்டியோகிராம் மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் மூலம் துல்லியமாக அவதானிக்கிறார்கள். மேலும் இத்தகைய பாதிப்பு இதயத்தின் மேல் அறைகளில் ஒன்றான இடது பக்க ஏட்ரியம் எனும் அறையில் உண்டாகிறது. இவை இதயத்திற்கு செல்லும் குருதி ஓட்டத்தை தடை செய்து, பாரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. சிலருக்கு பாரம்பரிய மரபணு மாற்றங்களாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். இவர்களுக்கு நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய பிரத்யேக சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.
வைத்தியர் முத்துக்குமரன் தொகுப்பு அனுஷா.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM