பொலிஸ் மாஅதிபர் குறித்த பொதுஜன பெரமுன பொதுச்செயலாளரின் கூற்றை அலட்சியப்படுத்த முடியாது ; விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன - அமைச்சர் ஆனந்த விஜேபால 

05 Aug, 2026 | 04:52 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பொலிஸ் மாஅதிபர் நடுவீதியில் அடித்து படுகொலை செய்யப்படுவார் என்று பொதுஜன பெரமனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ள கருத்து மிலேட்சத்தனமானது. இந்த கூற்றை அலட்சியப்படுத்த முடியாது. உரிய விசாரணைகள்  நடத்தப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) நடைபெற்ற திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொலிஸ் மாஅதிபர் நடுவீதியில் அடித்து படுகொலை செய்யப்படுவார் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ள கருத்து மிலேட்சத்தனமானது. இது தொடர்பில் தற்போது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பொலிஸ் மாஅதிபரின் தலைமைத்துவத்தில் போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதாளக் குழுக்களின் முக்கிய தரப்பினர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் கலக்கமடைந்துள்ளார்கள். பொதுஜன பெரமுன கட்சியும் இவ்வாறு கலக்கமடைந்திருக்கலாம். அதனையே அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

அரச அதிகாரிகள் சுயாதீனமாகவே செயற்படுகிறார்கள். எவ்வித அரசியல் தலையீடும் கிடையாது. பொதுஜன பெரமுனவின் ஆட்சியில் அவர்கள் எவ்வாறு பொலிஸ் சேவையை பயன்படுத்தினார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.  

பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரது மிலேட்சத்தனமான கருத்தை அலட்சியப்படுத்தப் போவதில்லை. உரிய விசாரணைகளும், அதனைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த மிலேட்சத்தனமான கருத்தை அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  பாராளுமன்றத்தில் நியாயப்படுத்துகிறார். இதுவே இவர்களின் அரசியல் கலாசாரம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் நம்பிக்கைகளை காப்பாற்ற முடியாமல் அரசாங்கம்...

2026-08-19 02:19:58
news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21
news-image

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல...

2026-08-18 17:37:41
news-image

மசகு எண்ணெய் விலை 80 டொலரில்...

2026-08-18 13:46:17