கொழும்பு, காலி வீதி கொள்ளுப்பிட்டி வரை மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

சைட்டம் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக இடம்பெற்றுவரும் பேரணியையடுத்து குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனால் கொள்ளுப்பிட்டி முதல் பம்பலப்பிட்டி வரையான வீதியில் பாரிய வாகநெரிசல் நிலவுவதாகவும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளனர்.