(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் காணாமல் போன சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். இந்த விடயத்தில் அதிகாரிகளை பணி இடைநிறுத்தம் செய்து இதில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முயற்சிக்க கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற திறைசேரியினால் வெளிநாடொன்றுக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதி காணாமல் போன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கை இறையாண்மை நிதி முகாமைத்துவ கட்டமைப்பு வரலாற்றில் முன்னர் இடம்பெறாத வகையில் பாதுகாப்பு வீழ்ச்சி 2026ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இது பாரியளவிலான மோசடி என்று பாராளுமன்ற பொது நிதி பற்றி குழுவின் அறிக்கை கூறுகின்றது.
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்த இணக்கப்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. இதில் மோசடி இடம்பெற்றுள்ளது என்பது உறுதியாகின்றது. இதனை யாராவது வழிநடத்தினார்களா? என்று கண்டறிய வேண்டும். இது நிதி குழுவின் பொறுப்பல்ல.
இந்த விடயத்தில் பொறுப்புக் கூற வேண்டிய உயர் அதிகாரிகள் இருக்கையில், ஏன் கனிஷ்ட அதிகாரிகள் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ரங்க ராஜபக்ஷ் என்ற கனிஷ்ட அதிகாரி உயிரிழந்துள்ளார்.
அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்படுகின்றது. பொது நிதி பற்றிய குழுவின் அறிக்கையில் திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் மட்டத்திலான சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் சில விடயங்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி குழுவினால் திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநரை அழைத்து கலந்துரையாடியுள்ளது. அதன்போது அந்த குழுவினால் இந்த விடயத்தில் தொடர்பாடல் பொறிமுறை தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ளது.
இவ்வேளையில் உள்ள பொறிமுறை போதுமானது என்று கூறப்பட்டுள்ளது எவ்வாறாயினும் இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.
அதிகாரிகளை பணி இடைநிறுத்தம் செய்து இதில் இருந்து தப்பிக்க முடியாது. இப்போது இந்த விடயத்தில் பெரிய சுறாக்கள் இருக்கும் போது சிறிய நெத்தலிகளை பிடிப்பது போன்ற செயற்பாடே இடம்பெற்று வருகிறது என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM