(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
நாட்டில் 2022 மற்றும் 2024 ஆம் வருடங்களில் முப்படையினருக்கு சட்டபூர்வமாக சேவையிலிருந்து விலகுவதற்காக வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலங்களில், 34,983 முப்படையை சேர்ந்த படைவீரர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தி எம்பி சாமர சம்பத் தசநாயக்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் 2022 மற்றும் 2024 ஆம் வருடங்களில் முப்படையினருக்கு சட்டபூர்வமாக சேவையிலிருந்து விலகுவதற்காக வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலங்களில், 34,983 முப்படையை சேர்ந்த படைவீரர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளனர். அதற்கிணங்க இராணுவத்தைச் சேர்ந்த 31,088 பேரும், கடற்படையைச் சேர்ந்த 2,501 பேரும், விமானப்படையைச் சேர்ந்த 1,394 பேரும் பொதுமன்னிப்பு காலத்தை பயன்படுத்தி சட்டபூர்வமாக சேவையிலிருந்து விலகியுள்ளனர்.
2022 நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையும் 2024 ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே 20 ஆம் திகதி வரை என முப்படையினருக்கு இரண்டு பொதுமன்னிப்பு காலங்கள் வழங்கப்பட்டன.
2026 மே 18 ஆம் திகதி நிலவரப்படி, தற்போது இலங்கை இராணுவத்தில் 1,30,851 பேரும், கடற்படையில் 34,903 பேரும், விமானப்படையில் 27,299 பேரும் சேவையில் உள்ளனர் என்றார்.
அதன் போது குறுக்கீடு செய்து கேள்வி எழுப்பிய சாமர சம்பத் தசநாயக்க எம்.பி,
2023 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்காக ஐந்து ஆண்டுகள் சம்பளமில்லாத விடுப்பு வழங்கப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில், முப்படையின் பல முக்கிய அதிகாரிகளும் வெளிநாடு சென்றனர்.
ஆனால், அவர்கள் வெளிநாட்டில் இருந்தபோது அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவர்களின் விடுப்பை இரத்துச் செய்ததுடன், 2024 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தின் சலுகையையும் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.
வெளிநாடுகளில் தொழில் மற்றும் கல்வி பயிலும் மேற்படி அதிகாரிகள் தற்போது பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதால், அவர்களின் பிரச்சினை தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தி நியாயமான தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM