2.5 மில்லியன் டொலர் சைபர் மோசடி: சர்வதேச பொலிஸ் ஊடாக நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்

Published By: Digital Desk 3

05 Aug, 2026 | 05:39 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர்  சைபர் மோசடி தொடர்பில்  அமெரிக்க நிதி புலனாய்வு பிரிவிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து சர்வதேச  பொலிஸ் ஊடாக விசாரணைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.  வெகுவிரைவில்  குற்றவாளி கைது செய்யப்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற  அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (05) நடைபெற்ற  திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர்  மோசடி செய்யப்பட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5மில்லியன் டொலர் சைபர் தாக்குதல் ஊடாக மோசடி செய்யப்பட்டமை தொடர்பில்  நிதி அமைச்சின் ஊடாக உள்ளக மட்டத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சின் குறைப்பாட்டினால் தான் இந்த  மோசடி இடம்பெற்றது என்ற நிலைப்பாட்டை தோற்றவிக்க எதிர்தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.இது முற்றிலும் தவறானது.

இந்த நிதி மோசடி தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில்  விரைவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சு மற்றும் மத்pதய வங்கியின் 91 அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.  வங்கி வைப்பு மற்றும் தரவு டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், சாம்பியா ஆகிய நாடுகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

அதேபோல்  அமெரிக்காவின் நிதி புலனாய்வுப் பிரிவிடமிருந்து அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸ் ஊடாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே வெகுவிரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்.

கடந்த காலங்களில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றுள்ளன.  ஆனால் அவற்றுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் அப்போதைய அரசாங்கங்கள் எடுக்கவில்லை. கறவை மாடுகள் இறக்குமதி ஊடாக பல பில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டது. அதேபோல் தரமற்ற பசளை இறக்குமதியால்  பல பில்லியன் டொலர் நட்டமும் ஏற்பட்டது. இந்த மோசடிகள் குறித்து தற்போது முறையான விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-15 06:17:08
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு...

2026-08-15 06:12:02
news-image

மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் உருவான அரசாங்கம்...

2026-08-15 06:01:04
news-image

வங்கி அதிகாரிகள், பொலிஸார் என நடித்து...

2026-08-15 05:57:44
news-image

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20ம் ஆண்டு...

2026-08-15 05:55:09
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா...

2026-08-15 05:47:55
news-image

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிய பலரது...

2026-08-15 05:08:29
news-image

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் அண்மைகாலமாக நாட்டில்...

2026-08-14 12:44:36
news-image

நீதித்துறையை அரசியலாக்க வேண்டாம் ; தைரியமிருந்தால்...

2026-08-14 16:54:24
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வெளிநாடுகள்...

2026-08-14 14:28:23
news-image

எனது தந்தை ரோஹண விஜேவீரவின் படுகொலைக்கு...

2026-08-14 16:24:59
news-image

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக...

2026-08-14 16:41:37