2.5 மில்லியன் டொலர் சைபர் மோசடி: எதிர்க்கட்சி தவறான தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறது – அமைச்சர் வசந்த சமரசிங்க

Published By: Digital Desk 3

05 Aug, 2026 | 02:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சைபர் மோசடி என்பது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதொரு பிரச்சினையல்ல. அரசாங்கத்தின்  பலவீனமான நிர்வாக கட்டமைப்பினால் தான்  2.5 மில்லியன் டொலர்  கடன் செலுத்தல் சைபர் தாக்குதலுக்குள்ளானது என்ற  நிலைப்பாட்டை   தோற்றுவிக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள் என வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்  வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (05) நடைபெற்ற  திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர்  மோசடி செய்யப்பட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

 திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர்  மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில்  எதிர்க்கட்சியினர் ஆரம்பத்தில் இருந்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த மோசடி தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்  ஹர்ஷ டி சில்வா தலைமைத் தாங்கும்  அரசாங்க நிதி பற்றிய குழு முழுமையான விசாரணைகளை மேற்கொண்டது.

அரசாங்க நிதி பற்றிய குழு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த மோசடி தொடர்பில் பல விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சைபர் தாக்குதல்  ஊடாகவே  2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆதாரபூர்வமான வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்விடத்திலும் அரசாங்கத்தின் தவறால் இந்த மோசடி இடம்பெற்றதாக குறிப்பிடப்படவில்லை.

சைபர் மோசடி என்பது இலங்iகைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதொரு பிரச்சினையல்ல. அரசாங்கத்தின்   பலவீனமான நிர்வாக கட்டமைப்பினால் தான்  2.5 மில்லியன் டொலர்  கடன் செலுத்தல் சைபர் தாக்குதலுக்குள்ளானது என்ற  நிலைப்பாட்டை   தோற்றுவிக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் அரசியல் நோக்கமுடைய குற்றச்சாட்டாகும்.

ஊழலுக்கு எதிராகவே மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். அந்த ஆணையை பாதுகாப்போம்.  இந்த மோசடி அரசாங்கத்தின்  பலவீனத்தால் இடம்பெற்றதல்ல,  அரச நிர்வாக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை குறைப்பாடுகள் கண்டறியப்பட்டு, அதற்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-15 06:17:08
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு...

2026-08-15 06:12:02
news-image

மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் உருவான அரசாங்கம்...

2026-08-15 06:01:04
news-image

வங்கி அதிகாரிகள், பொலிஸார் என நடித்து...

2026-08-15 05:57:44
news-image

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20ம் ஆண்டு...

2026-08-15 05:55:09
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா...

2026-08-15 05:47:55
news-image

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிய பலரது...

2026-08-15 05:08:29
news-image

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் அண்மைகாலமாக நாட்டில்...

2026-08-14 12:44:36
news-image

நீதித்துறையை அரசியலாக்க வேண்டாம் ; தைரியமிருந்தால்...

2026-08-14 16:54:24
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வெளிநாடுகள்...

2026-08-14 14:28:23
news-image

எனது தந்தை ரோஹண விஜேவீரவின் படுகொலைக்கு...

2026-08-14 16:24:59
news-image

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக...

2026-08-14 16:41:37