நீதித்துறையில் டிஜிட்டல் மாற்றம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Published By: Digital Desk 3

05 Aug, 2026 | 02:44 PM
image

(செ.கவிஷனா)

அதிகாரப்பூர்வ மற்றும் நவீன தொழில்நுட்பங்களை நீதித்துறையுடன் இணைக்கும் நோக்கில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் ஈ - உயர்நீதிமன்றம் (E-Court) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை, அனைத்து நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (4) விசேடநேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அதிகாரப்பூர்வ மற்றும் நவீன தொழில்நுட்பங்களை நீதிமன்ற கட்டமைப்புக்குள் இணைக்கும் நோக்கில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் ஈ - உயர்நீதிமன்றம் (E-Court) எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பக் கட்டமாக உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிறுவப்பட்டுள்ள இத்திட்டத்தை, ஏனைய நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் ஒப்புதல் கடந்த ஒக்டோபர் மாதம் பெறப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் இம்முயற்சியின் ஊடாக, ஆவணக் கோப்புகளைத் கையாளுவதைத் தவிர்த்து தொழில்நுட்ப வழியில் வழக்கு பணிகளை இலகுவாக முன்னெடுக்க முடியும் என்பதால் பொதுமக்களுக்குப் பெரும் நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நீதிமன்றங்களின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு சட்டத் திருத்தங்களும் நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, உயர் நீதிமன்றங்களில் சிறுவர்கள் தங்களது சாட்சியங்களை வேறு இடங்களில் இருந்தவாறே காணொளி தொழில்நுட்பம் மூலம் வழங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, நீதிமன்ற மருத்துவ அதிகாரிகளும் தங்களது அலுவலகங்களில் இருந்தபடியே சாட்சியமளிக்கும் வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதுடன், ஏற்கனவே 20 உயர் நீதிமன்றங்களுக்கும், 13 நீதிமன்ற மருத்துவ அலுவலகங்களுக்கும் மற்றும் 2 மருத்துவ பீடங்களுக்கும் இத்தகைய காணொளிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டின் இலக்கமுடைய குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவைக் திருத்தத்தின்படி, குற்றவியல் வழக்குகளிலும் தொலைதூர இடங்களில் இருந்து சாட்சியமளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக 130 நீதவான் நீதிமன்றங்களுக்கு இத்தொழில்நுட்பக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதிக்குள் இப்பணிகள் முழுமையாக நிறைவுபெறும். இதன் மூலம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சாட்சியங்கள் நீதிமன்றத்திற்கு நேரில் சமூகமளிக்காமலேயே புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலகுவாகச் சாட்சியமளிக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிய பலரது...

2026-08-15 05:08:29
news-image

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் அண்மைகாலமாக நாட்டில்...

2026-08-14 12:44:36
news-image

நீதித்துறையை அரசியலாக்க வேண்டாம் ; தைரியமிருந்தால்...

2026-08-14 16:54:24
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வெளிநாடுகள்...

2026-08-14 14:28:23
news-image

எனது தந்தை ரோஹண விஜேவீரவின் படுகொலைக்கு...

2026-08-14 16:24:59
news-image

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக...

2026-08-14 16:41:37
news-image

அரச அதிகாரிகள் அரசியல் அதிகாரத்துக்கும், செல்வாக்குக்கும்...

2026-08-14 16:53:28
news-image

நீதிமன்ற சுதந்திரத்தை இல்லாதொழிக்கும் கொள்கையில் அரசாங்கம்...

2026-08-14 22:21:16
news-image

நீதித்துறையை அரசியல்மயப்படுத்தினால் ஏற்படும் அபாயத்தை ஜனாதிபதி...

2026-08-14 22:18:16
news-image

வழக்கு விசாரணைகள் அதிகரிப்பதே நீதிமன்ற கட்டமைப்பு...

2026-08-14 19:29:50
news-image

மதுரையில் தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை உயர்ஸ்தானீகர்...

2026-08-14 20:11:09
news-image

எதிர்க்கட்சியை அடக்கும் சக்தி அரசாங்கத்திற்கு இல்லை...

2026-08-14 19:28:23