(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை குறித்து முறையான விசாரணைகளை சபாநாயகர் முன்னெடுக்க வேண்டும் என்று அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. ஆகவே இந்த மோசடி தொடர்பில் ஆராயும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற அமர்வின்போது திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அவுஸ்ரேலிய ஏற்றுமதி நிறுவனத்துக்கு திறைச்சேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் சைபர் குற்றங்கள் ஊடாக மோசடி செய்யப்பட்டமையால் அரசுக்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழு இந்த மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் விடயதானத்துக்குட்பட்ட நிறுவனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இந்த நிதி மோசடி குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு சபாநாயகர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உள்ள காரணத்தால் இந்த மோசடி தொடர்பில் பாராளுமன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த மோசடியைத் தொடர்ந்து நிதி அமைச்சின் கட்டமைப்பின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது. ஆகவே இந்த மோசடி குறித்து முறையான விசாரணையை பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM