ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்டின் பாகம் நிலவில் மணிக்கு 5,400 மைல் வேகத்தில் மோதியது!

Published By: Digital Desk 3

05 Aug, 2026 | 02:00 PM
image

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ரொக்கெட்டின் கைவிடப்பட்ட மேல் பகுதி இன்று (05) புதன்கிழமை நிலவின் மேற்பரப்பில் மணிக்கு 5,400 மைல் (மணிக்கு 8,690 கி.மீ) வேகத்தில் திட்டமிடப்படாத வகையில் மோதியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அயர்லாந்து நேரப்படி இன்றைய தினம் காலை 7:35 மணிக்கு (இலங்கை நேரப்படி மதியம் 1:05 மணியளவில்) நிலவின் வட அரைக்கோளத்தில் உள்ள ஈன்ஸ்டீன் பள்ளத்திற்கு அருகில் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2025 ஜனவரியில் இரண்டு நிலவுக் கலன்களை விண்வெளிக்கு ஏந்திச் சென்ற பால்கன் 9 ரொக்கெட்டின் 4 தொன் எடையுள்ள மேல் பகுதியே இவ்வாறு மோதியுள்ளது.

திட்டமிடப்பட்ட பணி நிறைவடைந்த பின்னர், விண்வெளியில் வீசப்பட்ட கதிர்வீச்சு, சூரியனின் கதிர்வீச்சு மற்றும் ஈர்ப்பு விசைகள் காரணமாக இதன் சுற்றுப்பாதை திசைமாறி நிலவை நோக்கித் திருப்பப்பட்டது.

இந்த மோதலால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என நாசா தெளிவாக அறிவித்துள்ளது.  இந்த மோதலின் காரணமாக நிலவின் மேற்பரப்பில் சுமார் 60 முதல் 90 அடி அகலமும், 12 முதல் 16 அடி ஆழமும் கொண்ட புதிய பள்ளம் உருவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.  

இந்த மோதலினால் நிலவில் எழும்பும் தூசிப் படலம் மற்றும் அதிர்வலைகளை நாசாவின் 'லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர்' உள்ளிட்ட விண்கலங்கள் ஆய்வு செய்யவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன்...

2026-08-15 16:35:15
news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40
news-image

கொள்கைக்கு எதிரான விடயங்களை அரசு நிச்சயம்...

2026-08-15 10:38:21
news-image

சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் இந்தியாவின்...

2026-08-15 11:21:07
news-image

ஏழை, நடுத்தர மக்களையும் இணைத்தே நாட்டின்...

2026-08-15 10:12:59
news-image

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா...

2026-08-15 09:54:57
news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18
news-image

‘ஏர் இந்தியா’ விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள்...

2026-08-14 14:16:43