அரச வங்கிகளிடம் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிப்பவர்களுக்கு எதிராக  என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? - சாணக்கியன் சபையில் கேள்வி 

05 Aug, 2026 | 01:50 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சாதாரண நபர் ஒருவர் அரச வங்கிகளில் சிறிய கடன் தொகையை பெற்று, தவணை கடனை குறித்த காலப்பகுதிக்குள் திருப்பிச் செலுத்தாவிடின் வங்கியானது அந்த நபருக்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கும், சொத்துக்களை பறிமுதல் செய்யும். ஆனால் கோடிக்கணக்கில் கடன் பெற்று, கடனை மீள செலுத்தாதவர்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிப்புச் செய்யும் நபர்களுக்கு எதிராக  முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதை வெளிப்படுத்தவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் நிதி அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு வினவினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி மற்றும் அரச அபிவிருத்தி மற்றும் முதலீட்டு வங்கி ஆகிய வங்கிகளில் தற்போதைய நிலுவை கடன் தொடர்பான பட்டியல், நிலுவையில் உள்ள அல்லது தள்ளுபடி செய்யப்பட்டுள்ள கடன் தொகை தொடர்பான விபரங்களை வழங்க முடியுமா?

இதுவரை மீளப் பெறப்பட்ட தொகை மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை, குற்றவியல் விசாரணைகள் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அவற்றின் தற்போதைய நிலை என்ன?

எடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள், மீட்கப்பட்ட தொகைகள் மற்றும் அத்தகைய அனைத்துக் கணக்குகளின் தற்போதைய நிலை ஆகியவற்றை விவரிக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையை அல்லது அக்காலப்பகுதிக்குள் முழுமையான விவரப் பட்டியலை வழங்கத் தவறினால், மொத்தக் கணக்குகளின் எண்ணிக்கை மற்றும் அதில் சம்பந்தப்பட்ட தொகைகளைக் குறிப்பிடும் இடைக்கால அறிக்கையை — மூன்று மாதங்களுக்குள் அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பாரா?

நாட்டில் சாதாரண ஒரு குடிமகன் அரச வங்கிகளில் சிறிய கடன் தொகையை பெற்று, அதனை குறித்த காலப்பகுதியில்  செலுத்தாவிட்டால் வங்கி அந்த நபருக்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கும், அவரது வாகனங்களையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்யும்.

கோடிக்கணக்கில் கடன் பெற்று குறித்த காலப்பகுதிக்குள் கடனை மீள செலுத்தாத அரசியல்வாதிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. கடந்த  காலங்களில் அவ்வாறான பல சம்பவங்கள் பதிவாகின.

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று அந்த கடனை வட்டிக்கு விட்டு சம்பாதித்த அரசியல்வாதி ஒருவர் வங்கிக்கு கடனை திருப்பிச் செலுத்தவில்லை. அந்த அரசியல்வாதிக்கு எதிராக நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரச வங்கிகளின் அதிகாரிகளும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிப்புச் செய்யும் நபர்களுக்கு எதிராக  முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதை வெளிப்படுத்தவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21
news-image

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல...

2026-08-18 17:37:41
news-image

மசகு எண்ணெய் விலை 80 டொலரில்...

2026-08-18 13:46:17
news-image

நாட்டை பிளவுபடுத்தும் 22ஆவது திருத்தம் ;...

2026-08-18 19:10:50