அகதிகள் படகு மூழ்கி 24 உயிர்கள் பலியானது

துருக்கியிலிருந்து கிரீஸ் நோக்கி 45 பேருடன் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று ஏஜியன் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக கிரேக்கத்தின் கடலோர பாதுகாப்பு படைபிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடலில் மூழ்கி உயிரிழந்த 24 பேரது உடல்கள் கிரீஸுக்குச் சொந்தமான சாமோஸ் தீவில் கரையொதுங்கியதையடுத்து, விபத்தில் காணமல் போன 11 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.