(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
வெளிநாட்டு அரசமுறை கடன் செலுத்தல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கும், நிதி அமைச்சுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் பொறுப்புக்கள் குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். சைபர் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு கொள்கை ரீதியில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
திறசேரியால் அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை சைபர் குற்றமாகும் என்று அரசாங்க நிதி பற்றிய குழு தெளிவாக அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், அறிக்கையின் உள்ளடக்கத்தை திரிபுப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது கவலைக்குரியது.
சைபர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உலகளாவிய ரீதியில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சாட்டுக்களை மாத்திரம் குறிப்பிட முடியாது. நாட்டின் நிதி கட்டமைப்பில் இதுவரை காலமும் காணப்பட்ட பலவீனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாக ஆராயப்பட்டு பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 11 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு ஆகிய கட்டமைப்பில் காணப்படும் பொதுவான குறைப்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அரசமுறை கடன் செலுத்தல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கும், நிதி அமைச்சுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் பொறுப்புக்கள் குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். சைபர் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு கொள்கை ரீதியில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM