தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜட் தாக்கல்

05 Aug, 2026 | 01:07 PM
image

தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக அரசின் நடப்பு நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

தமிழக முதல்வராக ஜோசப் விஜய் கடந்த மே மாதம் பத்தாம் திகதி பதவியேற்றார். தமிழக வெற்றி கழகம் சில கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இக்கட்சியின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் தமிழக ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜட் கூட்டத்தொடர் இன்று (5) தொடங்கியது. இதற்காக தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவைக்கு வருகை தந்த போது அவரிடம் நிதி அமைச்சர் மரிய வில்சன் வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து நிதி அமைச்சரான மரிய வில்சன் நடப்பு நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதன் சிறப்பம்சங்கள்...

* பத்து லட்சம் கோடி கடன் உள்ள இக்கட்டான சூழலில் மாநிலத்தை நிதி நெருக்கடிகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* சிங்கப்பெண் திட்டம் - 200 அலகு இலவச மின்சாரம்-  717 மதுக்கடைகள் மூடல்-  என பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்துள்ளது.

* மண்ணின் மகள் திட்டம்

* அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்.

* வெற்றி தொழில் முனைவோர் திட்டம்

* வெற்றி தமிழகம்

* மாவட்டம் தோறும் தாய் கேர் மையங்கள்

* மாநிலம் முழுவதும் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள்

* ஆன்றோர் மேம்பாட்டு திட்டம்

* கிராமிய விளையாட்டுப் போட்டி திட்டம்

* அண்ணன் சீர் திட்டம்

* தமிழ்நாடு சுடர் திட்டம்

* புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள்

* தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

என பல்வேறு புதிய திட்டங்களையும், பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சமூக மற்றும் மகளிர் நலத்துறை- கூட்டுறவு துறை- வேளாண்மை துறை என பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்களையும் நிதி அமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன்...

2026-08-15 16:35:15
news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40
news-image

கொள்கைக்கு எதிரான விடயங்களை அரசு நிச்சயம்...

2026-08-15 10:38:21
news-image

சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் இந்தியாவின்...

2026-08-15 11:21:07
news-image

ஏழை, நடுத்தர மக்களையும் இணைத்தே நாட்டின்...

2026-08-15 10:12:59
news-image

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா...

2026-08-15 09:54:57
news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18
news-image

‘ஏர் இந்தியா’ விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள்...

2026-08-14 14:16:43