கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என்று கருதப்படும் நிறுவனம் ஒன்றின் முன்னாள் பணிப்பாளர் இரேசா சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

டுபாயில் இருந்து நாடு திரும்பிய வேளையில் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதெனக் கருதப்படும் கவர்ஸ் கோப்­ரேஷன் சேர்­விசர்ஸ் தனியார் நிறு­வனத்தின் பணிப்பாளரான  இரேசா சில்வா கைதுசெய்யப்பட்டார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ தெளி­வு­ப­டுத்த முடி­யாத வழி­களில் சம்­பா­தித்­த­தாக கூற­ப்படும் 30 மில்­லியன் ரூபாவை வரை­ய­றுக்­கப்­பட்ட கவர்ஸ் கோப்­ரேஷன் சேர்­விசர்ஸ் தனியார் நிறு­வனம் ஊடாக கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள. குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்  கரு­தப்­படும் பட்­ட­பொல ஆரச்­சிகே ஒரெ­னெலா இரேஷா சில்வா அபு­தா­பியில் கைது செய்­யப்­பட்­டு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று  முற்­பகல் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­ப­ட்டதையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அவரை கைது செய்து நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதையடுத்து நிதி குற்றவியல் புலனாய்வு பிரிவினர் அவரை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்த நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.