தாய்லாந்தின் புகெட்டிலிருந்து இந்தியாவின் டெல்லி நோக்கி நேற்று (04) செவ்வாய்க்கிழமை பயணித்த ஏர் இந்தியா AI2379 விமானம், வானில் பயணித்துக் கொண்டிருந்தபோது கடும் காற்றுக் குலுங்கியதால், சுமார் 300 அடி உயரம் திடீரென கீழிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் 13 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 17 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு டெல்லி விமான நிலைய மருத்துவ மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஏர்பஸ் A320 வகையைச் சேர்ந்த இந்த விமானம் பாதுகாப்பாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. காயமடைந்தவர்களில் ஒருவரான விமானப் பணிப்பெண்ணுக்கு கடுமையான காயம் ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM