(நெவில் அன்தனி)
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடைசி மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை தனது சுழற்சியால் வீழ்த்திய பாகிஸ்தான் 4 விக்கெட்களால் ஆறுதல் வெற்றியை ஈட்டியது.
ஆனால், ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இலங்கை, 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.

இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை முறையே 4 விக்கெட்களாலும், 6 விக்கெட்களாலும் வெற்றிபெற்றிருந்தது.
கடைசிப் போட்டியில் பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சில் இலங்கையின் 6 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது. ஆனால், இலங்கை சுழல்பந்துவிச்சாளர்களால் தமது அணியின் 113 ஓட்டங்கள் என்ற மொத்த எண்ணிக்கையைத் தக்கவைக்க முடியாமல் போனது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அணித் தலைவி சமரி அத்தபத்து (34), சஞ்சனா காவிந்தி (20), இமேஷா துலானி (17) ஆகிய மூவரே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
மோமினா ரியாசாத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 18.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஆயேஷா ஸபார் 39 ஓட்டங்களையும் ஷவால் ஸுல்பிகார் 21 ஓட்டங்களையும் அணித் தலைவி முனீபா அலி 19 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சமரி அத்தபத்து 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கவிஷா டில்ஹாரி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகி: ஆயேஷா ஸபார், தொடர் நாயகி: இமேஷா துலானி.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM