(நெவில் அன்தனி)
இலங்கைக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் பொருட்டு இந்திய கிரிக்கெட் அணியினர் செவ்வாய்க்கிழமை (4) பிற்பகல் இலங்கை வந்தடைந்தனர்.

டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்திய அணியினர் மூன்று நாள் பயிற்சிப் போட்டி ஒன்றில் இலங்கை தெரிவு பதினொருவர் அணியுடன் விளையாடு வர். இந்தப் போட்டி கொழும்பு என் சி சி மைதானத்தில் 7ஆம் திகதியிலிருந்து 9ஆம் திகதிவரை நடைபெறும்.
இந்தப் போட்டியை நான்கு நாள் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அப் போட்டி மூன்று நாள் போட்டியாக அமையும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆகஸ்ட் 15ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதிவரை நடைபெறும்.
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எஸ் எஸ் சி மைதானத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 23ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை நடைபெறும்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் ஒன்பது போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா அவற்றில் 4 வெற்றிகளை ஈட்டியதுடன் 4 தோல்விகளைத் தழுவியது. ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது. இதற்கு அமைய தரவரிசையில் 48.15 சதவீத புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
இலங்கை ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 2 வெற்றிதோல்வியற்ற முடிவுகள் என்ற பெறுபேறுகளுடன் 41.67 சதவீத புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது.
பும்ராவுக்குப் பதில் புதுமுகம் நபி
இந்தியாவின் முதல் நிலை வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவின் இடது முழுங்காலில் ஏற்பட்ட காயம் பூரண குணமடையாததால் அவர் குழாத்திலிருந்து விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீர் வேகப்பந்துவீச்சாளர் 29 வயதுடைய ஆவ்கிப் நபி குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை நபி பெற்றுள்ளார்.
ரஞ்சி கிண்ண கிரிக்கெட்டில் கடந்த இரண்டு அத்தியாயங்களில் அவ்கிப் நபி 104 விக்கெட்களைக் கைப்பற்றியதன் மூலம் இந்திய குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
இதேவேளை, சாய் சுதர்சன் பூரண சுகம் அடையாததால் அவர் இன்றைய தினம் இலங்கை வருகை தரவில்லை. அவர் டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கைக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய குழாம்
ஷுப்மான் கில் (தலைவர்), கே. எல். ராகுல் (உப தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், த்ருவ் ஜுரெல், தேவ்டத் படிக்கல், ரிஷாப் பான்ட், சாய் சுதர்சன், ரவிந்த்ர ஜடேஜா, சரசன்ஷ் ஜெய்ன், மனவ் சுதார், அவ்கிப் நபி, குர்நூர் ப்ரார், குல்தீப் யாதவ், மொஹம்மத் சிராஜ், ப்ராசித் கிரிஷ்ணா.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM