சீ ஹோக்ஸ் உடனான பரபரப்பான போட்டியில் நவீன் ஜூட் புகுத்திய கோல் அப்கன்ட்றி லயன்ஸை வெற்றிபெறச் செய்தது

Published By: Vishnu

04 Aug, 2026 | 08:00 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் நடைபெற்ற சீ ஹோக்ஸ் கழகத்துக்கு எதிரான சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் நவீன் ஜூட் போட்ட கோல், நாவலப்பிட்டி அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்தை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி அடையச் செய்தது.

பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவித்த இந்தப் போட்டி இந்த வருட சுப்பர் லீக்கில் மிகச் சிறந்த போட்டியாக அமைந்தது.

இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடி இரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின.

எனினும், போட்டியின் ஆரம்பக் கட்டத்தில் அப்கன்ட்றி லயன்ஸ் போட்ட கோலே அதன் வெற்றி கோலாக அமைந்தது.

போட்டியின் 17ஆவது நிமிடத்தில் மொஹமத் இஷானிடம் இருந்து பந்தை பெற்றுக்கொண்ட மொஹமத் ஆக்கிப், உள்ளோக்கி பந்தை நகர்த்திச்சென்று இடப்புறமாக பரிமாறினார். அப்போது வேகமாக ஓடிய நவீன் ஜூட் பந்தை கோலினுள் புகுத்தினார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து சீ ஹோக்ஸ் அணி கோல் காப்பளாளர் ஆப்டெல்ஹமிட் எல்பாஸ்டாவிசி முன்னோக்கி நகர்ந்ததை அவதானித்த மொஹமத் ஆக்கிப் பந்தை மேலாக செலுத்தி கோலினுள் புகுத்த முயற்சித்தார். ஆனால் பந்தை நோக்கி வேகமாக நகர்ந்த சீ ஹோக்ஸ் பின்கள வீரர் இப்றாஹிம் அஹ்மத் கோல் வாயிலில் வைத்து பின்னோக்கி உதைத்து பெரும்பாலும் நிச்சயமான கோல் ஒன்றை தடுத்து நிறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அப்கன்ட்றி லயன்ஸ் அணியினர் கோல் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சீ ஹோக்ஸ் அணியினர் கோல் நிலையை சமப்படுத்தவும் முயற்சி செய்தனர்.

ஆனால், இரண்டு அணியினரும் கோல் போடும் முயற்சிகளில் கோட்டை விட்டனர்.

அப்கன்ட்றி லயன்ஸ் வீரர்களின் சில முயற்சிகள் கோல் கம்பத்தில் பட்டு திசை திரும்பின.

போட்டியின் கடைசி 15 நிமிடங்களில் இரண்டு அணியினரும் சம அளவில் மோதிக்கொண்ட வண்ணம் இருந்ததுடன் கோல்களையும் தவறவிட்டனர்.

இறுதியில் அப்கன்ட்றி லயன்ஸ் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26
news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58