பிரேம்ஜி அமரன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

04 Aug, 2026 | 07:21 PM
image

நடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முக ஆளுமை கொண்ட பிரேம்ஜி அமரன் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருப்பதாக அப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் கருப்பையா முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பிரேம்ஜி அமரன், மெல்வின் டேவிட், சாகித்யா, மாஸ்டர் ஆதர்ஷ், ஆனந்தன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் நடிகை அனுஹாசன் இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார். மியூசிக்கல் ஹாரராக தயாராகும் இந்த திரைப்படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் சார்பில் இயக்குநர் கருப்பையா முருகன் தயாரிக்கிறார்.

இதனிடையே இயக்குநர் கருப்பையா முருகன் -  பிரேம்ஜி அமரன் கூட்டணியில் 'வல்லமை' எனும் திரைப்படம் வெளியாகி கவனத்தை ஈர்த்தது என்பதும் இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கான குறைந்தபட்ச எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-08-13 17:42:03
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட நடிகர் இளன்...

2026-08-13 17:16:36
news-image

அருண் விஜய் நடிக்கும் 'இருளன்' படத்தின்...

2026-08-13 17:04:25
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-08-13 17:04:17
news-image

ஒக்டோபரில் வெளியாகும் நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’

2026-08-13 16:52:00
news-image

நடிகர் ரவி தேஜா நடிக்கும் 'இருமுடி...

2026-08-13 16:48:03