ரவி தேஜா நடிக்கும் 'இருமுடி கட்டு' படத்தின் அப்டேட்

04 Aug, 2026 | 07:19 PM
image

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி தேஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'இருமுடி கட்டு' திரைப்படத்தில் இடம் பெற்ற 'மனசு தன்னால..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சிவ நிர்வனா இயக்கத்தில் உருவாகியுள்ள 'இருமுடி கட்டு' திரைப்படத்தில் ரவி தேஜா - பிரியா பவானி சங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். சமூக பக்தி திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி- வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகைகளில் தமிழ் மட்டும் தெலுங்கு மொழியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'மனசு தன்னால அழகா மயங்கும் உன்னால..' எனத் தொடங்கும் புதிய பாடலும், பாடலுக்கான லிரிங்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்த பாடலை பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் எழுத, இசைமைப்பாளரும், பாடகருமான ஹேஷம் அப்துல் வஹாப் மற்றும் பின்னணி பாடகி கே ஆர் சாதிகா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். எளிய மனிதர்களின் நாளாந்த வாழ்வியலை விவரிக்கும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் இந்த பாடலும்... பாடலுக்கான மெலோடியான மெட்டும்... ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-08-13 17:42:03
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட நடிகர் இளன்...

2026-08-13 17:16:36
news-image

அருண் விஜய் நடிக்கும் 'இருளன்' படத்தின்...

2026-08-13 17:04:25
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-08-13 17:04:17
news-image

ஒக்டோபரில் வெளியாகும் நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’

2026-08-13 16:52:00
news-image

நடிகர் ரவி தேஜா நடிக்கும் 'இருமுடி...

2026-08-13 16:48:03