தாய்வான் வங்கியிலிருந்து 1.1 மில்லியன் டொலர் பணம் காணாமல் போனமை தொடர்பாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத் தலைவர் என்.எம்.எஸ் முணசிங்கவை நேற்று மாலை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தாய்வானின் ஈஸ்ட்ரன் வங்கியில் இருந்து இலங்கை வங்கிக் கணக்கொன்றுக்கு ஒருத் தொகை பணம் பரிமாற்றம் நடந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடாத்தப்படவுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.