சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இசை வெளியீடு

04 Aug, 2026 | 05:32 PM
image

சிறந்த இசையமைப்பிற்கான தேசிய விருதினை வென்ற 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழக மாநகரான கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

'வாத்தி' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விஸ்வநாத் & சன்ஸ்'. இதில் சூர்யா மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார்,  ரவீனா தாண்டன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.

எதிர்வரும் 14ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்த படத்தின் முதல் பகுதியை பின்னணி இசையுடன் பார்த்துவிட்டேன். அந்த நம்பிக்கையில் சொல்கிறேன். இந்தத் திரைப்படம் சூர்யாவின் ரசிகர்களை மட்டுமல்ல... அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் பிடிக்கும். அதிலும் முதல் பாதியில் இடம் பெறும் கொமடி காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-08-13 17:42:03
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட நடிகர் இளன்...

2026-08-13 17:16:36
news-image

அருண் விஜய் நடிக்கும் 'இருளன்' படத்தின்...

2026-08-13 17:04:25
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-08-13 17:04:17
news-image

ஒக்டோபரில் வெளியாகும் நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’

2026-08-13 16:52:00
news-image

நடிகர் ரவி தேஜா நடிக்கும் 'இருமுடி...

2026-08-13 16:48:03