சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும்தான் பெரிய கதாநாயகனா.?

By Robert

29 Jan, 2016 | 12:54 PM
image

சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும்தான் பெரிய கதாநாயகனா?  என்று ஒரு சினிமா விழாவில் ஏ.ஆர். முருகதாஸ் பேசினார்.

இது பற்றிய விவரம் வருமாறு:

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் 'கணிதன்'. அதர்வா, கேத்தரின் தெரசா நடித்துள்ள இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். இவர் ஏ.ஆர். முருகதாஸின் மாணவர். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை க்ரீன் பார்க் ஓட்டலில் நடந்தது. இசையை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட  ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சிறப்பு விருந்தினர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும் போது," ஒரு படம் வெற்றியடையும் போது அது படத்தை இயக்கிய இயக்குநருக்கு வெற்றியை மட்டுமல்ல அவருடன் இருக்கும் உதவியாளர்களுக்கும் வாய்ப்பை, வாழ்க்கையையும் தேடித் தருகிறது. புதுமையாக கதை சொல்லும் இயக்குநர்களுக்காக தாணு சார் மாதிரி எத்தனையோ தயாரிப்பாளர்கள் வாய்ப்பு கொடுக்க தயாராகக் காத்திருக்கிறார்கள். " என்றார்.

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பேசும்போது, "இது பத்திரிகையாளர் சம்பந்தப்பட்ட கதை. இதைத் தயாரிக்கும் தாணு சாரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். ரஜினி சாருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தவர் அவர். கடின உழைப்பாளி ராசியானவர்.

நான் 'துப்பாக்கி' படம் எடுத்தபோது, அதன் முதல் தோட்டாவாக இருந்தவர் அவர்தான். நான் 'கத்தி' படம் இயக்கிய போது நான் ஒரு கத்திதான் எடுத்தேன். ஆனால் ஊரில் யார் யாரோ 100 கத்திகள் எடுத்தார்கள். நான் படத்தில் பாம் வைத்தால் நிஜமாகவே தியேட்டரில் பாம் வைத்தார்கள். அப்போது நான் செய்வது அறியாமல் தவித்த போது எனக்குத் துணை நின்றவர் தாணு சார்தான். அவர் தயாரிக்காத படத்துக்குக்கூட எனக்கு அவ்வளவு பக்க பலமாக இருந்தார். சத்யம் திரையரங்கில் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடந்தபோது  படம் வெளிவருமா வராதா என்று நான் தவித்துக் குழம்பிய போது அவர் அங்கு அவர்கள் நடுவில் வந்து சொன்னார், படத்தை திரையிடுங்கள் எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்ன பாதிப்பு வந்தாலும் நான் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார். அப்படிப்பட்டவர் இந்த தாணு சார்.

என் உதவியாளர்கள் 'அரிமா நம்பி' ஆனந்த் சங்கர், 'கணிதன்' சந்தோ{க்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 'துப்பாக்கி' படத்தில் வேலை பார்த்த என் 6 உதவியாளர்களும் இப்போது படம் இயக்குகிறார்கள்.

தமிழ் திரையுலகில் 'கபாலி', 'தெறி' என்கிற 2 பெரிய படங்களை எடுத்து வருகிறார். அந்தப் படத்தோடு என் உதவியாளர் இயக்கும் 'கணிதன்' படமும் தயாரிக்கிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. 'கபாலி', 'தெறி' என்கிற 2 பெரிய படங்களோடு அதற்கு எந்த அளவிலும் குறையில்லாமல் இந்தப் படத்தையும் நேசிப்பார் என்பது எனக்குத் தெரியும்.

'கணிதன்' இயக்கும் சந்தோஷ் நல்ல உழைப்பாளி, சுறுசுறுப்பானவர்.

நாயகன் அதர்வாவைப் எனக்குப் பிடிக்கும், காரணம் அவரது அப்பா முரளிசார் எனக்குப் பிடிக்கும். தமிழ்ச் சினிமாவில் அதிகமான  புதுமுக இயக்குநர்களுக்கு முதல் படம் கொடுத்த நாயகன் முரளிசார். அவர் நமக்கு அதர்வாவையும் கொடுத்தவர் என்பதால் அவரைப் பிடிக்கும். அதேபோல அதர்வாவும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். 

ஒரு கதாநாயகன் சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும் பெரிய கதாநாயகன் என்றில்லை.  காலையில் 9 மணிக்குப் படப்பிடிப்புக்கு வந்தால் பெரிய உண்மையான நடிகர் என்று கூறமுடியாது.

காலை 7 மணிக்கே சீருடையுடன் பள்ளிக்குப் போகும் குழந்தைகளைப் பார்க்கிறோம். அவர்களை சின்சியரானவர்கள் என்று நாம் கூறுவதில்லை.

நல்ல கதையைத் தேர்வு செய்து நடிப்பதுதான் திறமை. கதாநாயகன் 50 கதைகள் கேட்டால்தான் ஒரு நல்ல இயக்குநரை  கண்டுபிடிக்கமுடியும், அடையாளம் காணமுடியும். நல்ல கதை கேட்டது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயமோ அதேபோல் மோசமான கதை கேட்பதும் கொடுமையான விஷயம். அஜீத்சார், விஜய்சார் போல அதர்வாவும் புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இதில் நடித்துள்ள கேத்தரின் தெரசா முன்னணி நாயகியாக வருவார். இசையமைத்திருக்கும் சிவமணியும் நானும் ஒரு முறை விமானத்தில் போனோம். அவர் கண்ணை மூடிக்கொண்டு இருந்தார். அட கவலையில்லாத மனிதர் என்று நினைத்தேன். சற்று நேரத்தில் என் காதில் ஹெட் போனை மாட்டிவிட்டு விமானத்தின் ஒலியை அடிப்படையாக வைத்து ஒரு ரிதம் போட்டுள்ளேன் கேளுங்கள் என்றார். கேட்டு விட்டு அசந்து விட்டேன்.

நான் வெளியிட ரகுமான் சார் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவும் என் படத்துக்காக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆஸ்கார் விருது வாங்கும் போது வெள்ளைக்காரர்கள் மத்தியில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றார். அப்போது எனக்கு எல்லாப் புகழும் தமிழனுக்கே என்று தோன்றியது.

சாப்பாடு எப்படி இருக்கும் என்பதற்குச் சாப்பிடவே வேண்டாம். சமையல் கட்டிலிருந்து வரும் வாசனையிலேயே தெரியும்.  இந்த 'கணிதன்' படமும் அப்படித்தான். எடிட்டிங், டீஸர், பாடல் நிலையிலேயே நன்றாகத் தெரிகிறது. நம்பிக்கை வருகிறது. இப்படம் வெற்றிப் படமாகி சந்தோஷ் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்.' இவ்வாறு முருகதாஸ் பேசினார்.

'தெறி'பட இயக்குநர் அட்லி பேசும் போது, " இயக்குநர் சந்தோஷ் எனக்கு நீண்டநாள் நண்பர் அவரை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. நான் சாதாரண ஆள். என்னை ரகுமான் சார் இருக்கும்  இந்த மேடையில் ஏற்றியவர் தாணுசார். அடுத்தவர்களை உயர்த்தி வைத்து அழகு பார்ப்பவர் அவர்.

ஒரு தயாரிப்பாளர் எப்படி இருக்கவேண்டும் என்றால் தாணுசார்  போல் இருக்கவேண்டும் என்பேன். என் அப்பாவிடம் 100 ரூபாய் கேட்டால் கூட 10 கேள்வி கேட்பார். ஆனால் இவர் கோடிக்கணக்கில் தருவார். தயாரிப்பாளர் என்றால் தாணுசார் போல்தான் இருக்கவேண்டும்' என்றார்.

நாயகன் அதர்வா பேசும்போது,' ஒருநாள் தாணுசார் சந்தோஷிடம் என்னைக் கதை கேட்கச் சொன்னார். சந்தோஷ் சொன்ன இந்தக் கதை எனக்குப் பிடித்து இருந்தது. ஆனால் சற்றுப் பயமாக இருந்தது. நம்மால் முடியுமா? ஏற்றுக் கொள்வார்களா? என்று பயமாக இருந்தது. சிறு வயதில் சிவமணிசாரின் டிரம்ஸ் வாசிப்பைக் கேட்டு நான் டிரம்ஸ் வாங்கி வாசிக்க முடியாமல் வீட்டில் என்னைக் கழுவிக் கழுவி ஊற்றினார்கள் ரகுமான் சார், ஏ.ஆர் முருகதாஸ்சார் இவர்கள் இருவருமே எனக்கு இன்ஸ்பிரேஷன் அவர்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்." என்றார்.

நாயகி கேத்தரின் தெரசா பேசும்போது, "இது எனக்கு முக்கியமான விழா இது நான் ஒப்பந்தமான 2 வது படம். கதை கேட்டேன், பிடித்தது. ஒரு படத்துக்கு உணர்வுகளை வெளிப்படுத்த இசை முக்கியம். இதில் அந்த இசை நன்றாக வந்துள்ளது. இது கருத்துள்ள கமர்ஷியல் படம்." என்றார்.

படத்தின் இயக்குநர் டி.என் .சந்தோஷ் பேசும்போது, 'என்னைக் கவர்ந்தவர்கள், பாதித்தவர்கள் 4 பேர். ஒருவர் என் அப்பா நாராயணன். இப்போது அவர் இல்லை. இன்னொருவர் இயக்குநர் ஷங்கர் சார், 4 வயதில் அவரது ஜென்டில் மேன் பார்த்து வியந்தேன். இன்னும் ஒருவர் முருகதாஸ்சார் அவரிடம் உதவியாளராகி விட்டேன். மற்றொருவர் ரகுமான் சார். இவர் இசையில்தான் முதல் படம் இயக்குவது என்று ஆசைப்பட்டேன் அவர் ஆஸ்கார் விருது வாங்கியதும் அந்த  ஆசையை விட்டு விட்டேன். கதை பண்ணுவது கஷ்டமில்லை. அதை நினைத்தபடி எடுப்பது சுலபமில்லை. தாணுசார் கேட்கிறதை எல்லாம் கொடுத்து ஊக்கம் கொடுத்தார். 'துப்பாக்கி' யைப் போலவே இதற்கும் செலவழித்துள்ளார்' என்றார்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, "இது மாதிரி நிகழ்ச்சிகளுக்குப் போகும்போதும் உங்களைப் பார்க்கும்போது குடும்பத்தினருடன் ஒன்றாக இருப்பது போல உணர்கிறேன். சற்று இடைவெளி விட்டு ஒவ்வொரு நிகழ்ச்சி போகும்போதும் முகங்கள் மாறுகின்றன. அதற்குள் புதிய ஜீனியஸ்கள் வந்து விடுகிறார்கள். டிரம்ஸ் சிவமணிக்கு இந்தப் படம் இசை எல்லாம் ஒரு அடிப்படையான விஷயம்தான். அவருக்குள் இருக்கும் தங்கச்சுரங்கம் இனிமேல்தான் வெளிவரப் போகிறது.' என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நன்றியுரை ஆற்றும்போது,' பத்திரிகையாளர் நண்பர்களே, ஊடக நண்பர்களே படத்தின் விளம்பரங்களில் 'உங்கள் குரலாய் கணிதன், உங்களுக்காக கணிதன் 'என்று போடச் சொன்னேன். உங்களுக்காக 'கணிதன்' குரல் கொடுப்பான். நீங்கள் கரம் கொடுப்பீர்'என்றார்.

இவ்விழாவில் டிரம்ஸ் சிவமணியின் குருநாதர்களான இசை மேதைகள் இற்;கு விநாயக்ராம், காரைக்குடி மணி ஆகியோர் பங்கேற்றனர். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடலாசிரியர் மதன்கார்க்கி, டிரம்ஸ் சிவமணி,வில்லன் நடிகர் தருண் அரோரா ஆகியோரும் பங்கேற்றுப் பேசினர். முன்னதாக டிரம்ஸ் சிவமணியின் கச்சேரி நடந்தது.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய விருது பெற்ற நடிகர் கிஷோர்...

2022-10-01 16:04:14
news-image

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற...

2022-10-01 16:03:52
news-image

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

2022-10-01 16:03:39
news-image

நடிகர் மைக்கேல் தங்கதுரை நடிக்கும் 'ஆரகன்'...

2022-10-01 16:02:55
news-image

பொன்னியின் செல்வன் பாகம் 1 -...

2022-10-01 12:21:05
news-image

கார்த்தியின் 'சர்தார்' பட டீசர் வெளியீடு

2022-09-30 16:28:19
news-image

மேடை கோல் பந்தாட்டத்தை தமிழில் அறிமுகப்படுத்தும்...

2022-09-30 16:22:28
news-image

நடிகை ஷீலா ராஜ்குமாரின் 'பட்டாம்பூச்சியின் கல்லறை'...

2022-09-30 10:45:08
news-image

மகேஷ் பாபுவின் தாய் இந்திராதேவி காலமானார்

2022-09-28 11:45:04
news-image

பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் குறு...

2022-09-28 10:37:09
news-image

சுந்தர் சி யின் 'காஃபி வித்...

2022-09-27 17:59:39
news-image

சுந்தர் சி யின் 'காஃபி வித்...

2022-09-27 17:20:17