கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog Sri Lanka Cricket Awards 2025'

04 Aug, 2026 | 05:03 PM
image

இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி நிறுவனமும் விளையாட்டுத் துறையின் தீவிர ஆதரவாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் அனுசரணையுடன் நடைபெறும் '2025 Sri Lanka Cricket Awards' விழா, வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி Cinnamon Life ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

மேலும், இந்த வருடாந்த விருது விழாவின் முதன்மை அனுசரணையாளராக டயலொக் நிறுவனம் தனது பங்களிப்பை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. 13 ஆண்டுகளுக்கும் மேலாக டயலொக் மற்றும் இலங்கை கிரிக்கெட் இடையே நிலவி வரும் இக்கூட்டாண்மையானது, இளையோர் அபிவிருத்தி முதல் தேசிய அணிகள் வரை அனைத்து மட்டங்களிலும் நாட்டின் கிரிக்கெட் விளையாட்டிற்கு டயலொக் வழங்கி வரும் ஆதரவைத் தொடர்ந்து உறுதிப்படுத்துகிறது.

இந்த வருடாந்த விருது வழங்கும் விழா, சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய இலங்கையின் முன்னணி ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளின் சாதனைகளைக் கௌரவிக்கவுள்ளது. நாட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் வளர்ந்து வரும் வீரர்களைக் கௌரவிக்கும் வகையில், நாட்டின் மிக எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் நிகழ்வுகளில் ஒன்றாக இது மாறியுள்ளது.

இந்நிகழ்வின் பிரதான கௌரவங்களாக ஆண்டின் சிறந்த ஆண் கிரிக்கெட் வீரர் (Men's Cricketer of the Year) மற்றும் ஆண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை (Women's Cricketer of the Year). அத்துடன், ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் (Emerging Cricketer of the Year) விருதானது நாட்டின் இளம் திறமையாளர்களைக் கௌரவிக்கவுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டுக்காக பல சர்வதேசப் பிரிவுகளின் கீழும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், 23 வயதுக்குட்பட்டோர் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் உட்பட Premier League Tournament, Premier League Limited Over Tournament மற்றும் கிளப் டி20 போட்டிகளில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய உள்நாட்டு வீரர்களும் கௌரவிக்கப்படுவர். இலங்கை கிரிக்கெட் விருதுகளுக்கு டயலொக் தொடர்ந்து வழங்கி வரும் இந்த ஆதரவானது, வளர்ந்து வரும் திறமைகளை ஊக்குவிப்பது முதல் உயர்மட்டச் சாதனைகளைக் கொண்டாடுவது வரை இலங்கை கிரிக்கெட்டிற்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி திரு. சுபுன் வீரசிங்க (இடமிருந்து 3ஆவது) 'Dialog Sri Lanka Cricket Awards' விழாவிற்கான அனுசரணைக் காசோலையை, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தவிசாளர் திரு. எரான் விக்கிரமரத்னவிடம் (இடமிருந்து 4ஆவது) வழங்கி வைக்கிறார்.

படத்தில் (இடமிருந்து வலமாக): திரு. ஹர்ஷ சமரநாயக்க (துணைத் தலைவர் - குழும சந்தைப்படுத்தல், டயலொக் ஆசிஆட்டா), திரு. ஆஷ்லி டி சில்வா (முதன்மை நிறைவேற்று அதிகாரி, இலங்கை கிரிக்கெட்), திரு. சுபுன் வீரசிங்க (குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா), திரு. எரான் விக்கிரமரத்ன (தவிசாளர், இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு), திரு. லசந்த தெவரப்பெரும (குழும முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா) மற்றும் திரு. உபுல் நவரத்ன பண்டார (சந்தைப்படுத்தல் பிரதானி, இலங்கை கிரிக்கெட்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44