மட்டக்களப்பு  கொக்கட்டிசோலையில் ஒரு பிள்ளையின் தாய்  மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை 3.3௦ மணியளவில் இடம்பெறுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மரணம் அடைந்த தாயின் சகோதரியின் நண்பர்  ஒருவர்  அவருடன் பழகி வந்துள்ளதாகவும் இருவருக்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகப்படுவததாக தங்கை தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் தங்கையிடம் உங்களது அக்கா தூக்குப் போட்டுள்ளார் என்று கூறியதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தங்கை தனது அக்கா கட்டிலில் உறங்கிய நிலையில் சடலமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

கணவர் வெளிநாட்டில் தொழில் புரிவதாகவும் மரணமடைந்தவர் தனது மகளுடன் தனிமையில் வசித்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக கோபமடைந்த பிரதேச மக்கள் நேற்றிரவு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதன் காரணமாக கொக்கட்டிச்சோலை பகுதியில் பெரும் பதற்ற நிலை உருவாகியிருந்தது.

இதனை அடுத்து பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்ததை அடுத்து தற்போது சுமுகமான நிலை உருவாகியது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.