மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

04 Aug, 2026 | 03:27 PM
image

இன்றைய திகதியில் பாடசாலையில் பயிலும் மாணவர்கள் முதல் உயர் பொறுப்பில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் வரை நாளாந்தம் வெவ்வேறு நிகழ்வுகள் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாயி வருகிறது.

இந்த தருணத்தில் மன அழுத்தத்தை சமச்சீராக பராமரிக்கவில்லை என்றால் அது மனச்சோர்வு - மன உளைச்சல் - மனக்கஷ்டம்-  கவலை-  உளவியல் பாதிப்பு - என அதன் தாக்கம் தொடர்ந்து வீரியத்துடன் நீடிக்கும்.

இதன் காரணமாக எம்மில் பலரும் மன அழுத்தம் ஏற்பட்டால்... அதனை திசை திருப்புவதற்கு ஏதேனும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவர். ஆனால் போட்டிகள் அதிகமாகிவிட்ட இந்த காலகட்டத்தில்.. மன அழுத்த மேலாண்மை என்பது அவசியமானதாகி வருகிறது. இதற்காக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் ராகு கால வேளையில் அருகில் இருக்கும் துர்க்கை அம்மன் , சூலம் ஏந்திய காளி தேவி ஆகிய பெண் தெய்வ ஆலயத்திற்கு சென்று 51- 54- 108 - என்ற கணக்கிலான எலுமிச்சம் பழத்தை வாங்கி, அதனை மாலையாக கோர்த்து, துர்க்கை அம்மனுக்கோ அல்லது காளி தேவிக்கோ சாற்றி மனதெளிவை வழங்கிட வேண்டும் என பிரார்த்தித்தால் உங்களுடைய பிரார்த்தனை வெற்றி பெறும். 

வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில் சந்திரன்- சுக்கிரன்- ராகு -ஆகியோரின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால்... இவை மன அழுத்தத்தை வெளியேற்றி மனத் தெளிவை வழங்குகிறது. இதன் காரணமாகவே பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகு கால வேளையில் வழிபட வேண்டும் என எம்முடைய முன்னோர்கள் வரையறை செய்தனர்.

  அவர்கள் மனதெளிவுடன் இருந்தால்தான் இந்த பூவுலகம் ஆரோக்கியமாக இயங்கும்.‌ மனத் தெளிவு பிறந்தால்... செல்ல வேண்டிய பாதை குறித்த தெளிவும் ...விசாலமான பார்வையும் கிடைப்பதுடன் மன அழுத்தத்தை மேலாண்மை செய்து வெற்றி பெறலாம்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21
news-image

கணவன் - மனைவி இடையே உள்ள...

2026-08-29 15:43:45
news-image

மனதிற்கினிய வாழ்க்கைத் துணை அமைவதற்கான எளிய...

2026-08-28 16:57:23
news-image

ராகு தோஷத்தை நீக்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-27 16:32:55
news-image

மகாலட்சுமி வழிபாடு : சில சூட்சமங்கள்

2026-08-26 16:50:28
news-image

தனவரவு தங்குதடையின்றி கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-08-25 17:21:17
news-image

உறவுகளின் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் பிரத்யேக...

2026-08-24 16:27:53