நடிகர் அருள்நிதி நடிப்பில் 'டிமாண்டி காலனி' படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் 'டிமான்டி காலணி 3' படத்தில் இடம் பிடித்த 'ரத்தத்த தா ' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள 'டிமான்டி காலணி 3' படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், ஜி. எம். குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார் , மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ்- தங்கல் டிவி - ஆர் டி சி மீடியா- ஞானமுத்து பட்டறை - ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக காணொளி வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்.. :ரத்தத்த தா ' எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, இசையமைப்பாளரும் , பாடகருமான சாம் சி எஸ் பாடியிருக்கிறார். கதையின் சாராம்சத்தை விவரிக்கும் வகையில் உருவாகி இருப்பதாலும் இப்பாடலுக்கான காணொளியில் ஹாரர் திரில்லருக்கான காட்சி மொழி அம்சங்கள் இடம் பிடித்திருப்பதாலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM