இது­வரை நான் ஆடிய அனைத்து ஆட்­டங்­க­ளிலும் சிறப்­பா­கவே ஆடி­யுள்ளேன். என்­னு­டைய முழுத் திற­மையை அனை­வ­ரி­டமும் வெளிப்­ப­டுத்திக் காட்­டி­யுள்ளேன். 

என்­னு­டைய திற­மையின் கார­ண­மாக கண்­டிப்­பாக விரைவில் அணியில் எனக்கு வாய்ப்பு அளிக்­கப்­படும். 

அந்த வாய்ப்பும் என் வீடு தேடி வரும் என இந்­திய சுழற்­பந்­து­வீச்­சாளர் அஷ்வின் தெரி­வித்­துள்ளார். 

தற்­போ­தைய இந்­திய அணியில் விளை­யா­டா­தது குறித்து நிரு­பர்­க­ளுக்கு அளித்த பேட்­டியின் போதே அஷ்வின் இவ்­வாறு தெரி­வித்தார். 

மிகவும் சிறப்­பாக செயற்­பட்ட அஷ்வின் நீண்ட காலத்­திற்கு பந்­து­வீச்­சா­ளர்கள் வரி­சையில் முத­லி­டத்தில் திகழ்ந்தார். 

இந்த நிலையில் அணியின் தலை­வ­ராக கோஹ்லி பொறுப்­பேற்­ற­தை­ய­டுத்து, இந்­திய அணியில் நிறைய மாற்­றங்கள் செய்­யப்­பட்­டன. 

அணியின் முக்­கிய வீர­ரான அஷ்வின் வெளி­யேற்­றப்­பட்டார். அவ­ருக்கு பதி­லாக சாஹல், குல்தீப் ஆகிய இரு புதிய சுழற்­பந்து வீச்­சா­ளர்­களைக் கள­மி­றக்­கினார் கோஹ்லி. 

இந்­நி­லையில் என்­னு­டைய முக்­கி­யத்­துவம் அனை­வ­ருக்கும் தெரியும். 

மிகவிரைவில் அணியில் நான் தேர்ந்தெடுக்கப்படுவேன். வாய்ப்புகள் என் வீட்டுக் கதவைத் நிச்சயம் தட்டும் என்று அஷ்வின் நம்பிக்கையோடு கூறியுள்ளார்.