தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்ததாக தொடரப்பட்ட புகாரில் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்தின் நதிநீர் உரிமையை நிலை நாட்டுவதில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கு பற்றிய அக்கட்சியின் முன்னணி தலைவரும் ,தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின்- தமிழக முதல்வர் விஜய் குறித்தும், பெண்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருந்த சூழலில் இன்று காலை சென்னையில் உள்ள அவரது வீட்டை சுற்றிலும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பிறகு காவல்துறை அதிகாரி உதயநிதியை சந்தித்து, அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகள் மற்றும் அதன் பிரிவுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து உதயநிதி அவருடைய சட்டத்தரணிகளுடன் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார். கைது நடவடிக்கையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடினார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தடை கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை பிற்பகலில் நடைபெறும் என்றும், 12 மணி வரை உதயநிதியை கைது செய்ய வேண்டாம் எனவும் நீதியரசர்கள் காவல்துறைக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிலையில் 11:00 மணி அளவில் விசாரணைக்காக உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் காவல்துறையினர் கைது செய்து, அவரை சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதிலும் காவல்துறையின் வாகனத்திலேயே அவர் தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உதயநிதி ஸ்டாலின் கைதானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM