வடக்கு, கிழக்கு இணைப்பின் மூலம் சமஷ்டி ஆட்­சி­யினை வழங்கி இறு­தியில் தமி­ழீ­ழத்­தினை உரு­வாக்கும் பாதை­யி­லேயே அர­சாங்கம் பய­ணித்து வரு­கின்­றது. இரா­ணுவம் தண்­டிக்­கப்­ப­டு­வதே இதன் பிர­தான நோக்­க­மாகும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச எம்.பி. தெரி­வித்தார். 

பிர­தமர்  ரணில் விக்­ர­ம­சிங்க மூல­மா­கவே ஈழத்­துக்­கான பயணம் முன்­ன­கர்த்­தப்­பட்டு வரு­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் மக்கள் சந்­திப்பு நிகழ்வின் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார், 

அவர் மேலும் கூறு­கையில், 

இந்த அர­சாங்கம் முழு­மை­யாக சர்­வ­தேச மற்றும் புலம்­பெயர் அமைப்­பு­களின் தேவை

க்கு அமை­யவே ஆட்­சி­ய­மைத்து வரு­கின்­றது. அதன் பார­தூ­ர­மான நகர்­வு­களை இன்று அர­சாங்கம் நிறை­வேற்றி வரு­கின்­றது.  சர்­வ­தேச சட்­டத்­திற்கு அமைய நாட்­டினை இரண்­டாக்கி  தனி ராஜ்­ஜியம் அமைக்கும் வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­க­ப்பட்டு வரு­கின்­றது. இதற்­காக இரண்டு நிபந்­த­னைகள் இடப்­பட்­டுள்­ளன . 

அதில் முத­லா­வது சிறிது காலத்­திற்கு வடக்கு,  கிழக்கு மாகா­ணங்­களில் மாத்­திரம் தனித்த அதி­கா­ரங்­களில் மாகா­ணங்­களை நடத்தி செல்­லு­த­லாகும்.  இது மிகவும் மெது­வாக முன்­னெ­டுக்­கப்­படும் ஒரு தந்­தி­ர­மாகும். வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை இணைத்து சமஷ்டி அதி­கா­ரங்­களை கொடுத்­த­வுடன் இந்த காரணி நிறை­வேறும். அடுத்­த­தாக வடக்கு, கிழக்கில் மக்கள் இரா­ணுவ குற்­றங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தாக கூறி அவை தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வலி­யு­றுத்­த­லாகும். அதற்­கா­கவே இப்போது இரா­ணுவ குற்­றங்கள் என்ற பெயரில்  சர்­வ­தேச விசா­ர­ணைகள் ஏற்­ப­டுத்த முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. 

இதற்கு  சாத­க­மாக சரத் பொன்­சேகா, தமி ழர் தரப்பு உள்­ளிட்ட இந்த அர­சாங்­கத்தின் சிலரும் போர்­க்குற்­றங்கள் தொடர்பில் தானா­கவே வாய் திறந்து வரு­கின்­றனர். இது சர்­வ­தேசதரப்­பி­ன­ருக்கு போது­மான சாட்­சி­ய­மாக அமையும். அதன் மூலம் எமது இரா­ணு­வத்தை தண்­டிக்க சாட்­சி­யங்கள் நிறு­வப்­படும். அதன்மூல­மாக எமது இரா­ணு­வம் சர்­வ­தேச தூக்கு மேடைக்கு கொண்­டு­செல்­லப்­படும். 

ஆகவே இரண்­டா­வது கார­ணியை நிறை­ வேற்­று­வதன் மூலமாக இலங்­கையில் தமிழர்கள்  மீது இராணுவ அடக்­கு­முறை கையா­ளப்­பட்­ட­தா­கவும், அர­சாங்கம் இதனை தடுக்­கவோ அல்­லது முழு­மை­யாக நிறுத்­தவோ முடி­யாது போன­தனால், வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்கு சமஷ்டி மூல­மாக சில நியா­யங்கள் கிடைக்கும் நிலையில் வடக்கு, கிழக்கு பிர­தே­சங்கள் தனி  இராச்­சி­ய­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­படும் எனவும்   ஐக்­கிய நாடுகள் சபை தீர்­மானம் ஒன்றை நிறை­வேற்றும். இந்த  நகர்­வு­களே இப்­போது முன்னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

இதற்கு தேவை­யான இரண்டு நகர்­வு­களை தான் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­ன­கர்த்தி வரு­கின்றார். அவர் தனது ஆட்சிக் காலத்தில் தமி­ழீ­ழத்தை உரு­வாக்கிக்கொ­டுக்கும் பல­மான  நகர்­வு­களை முன்னெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தனது ஆட்சிக் காலத்தினை கொண்டு நடத்துகின்றார். இறுதியில் எமது இராணுவம் போர் க்குற்றவாளிகள் என தண்டிக்கப்படுவதும், நாடு இரண்டாக பிளவுபடுவதும் புலிகளை நியாயப்படுத்தி தமிழீழம் உருவாகுவதி லுமே முடிவடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.