இந்தியாவின் குஜராத்தில் சாண்டிபுரா வைரஸ் தொற்று: 22 சிறுவர்கள் உயிரிழப்பு 

Published By: Digital Desk 3

04 Aug, 2026 | 09:27 AM
image

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சாண்டிபுரா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அம்மாநில சுகாதாரத் துறை உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 35 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 22 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களிடையே மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 184 சந்தேகத்திற்குரிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

35 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு,  11 பேரின் இரத்த மாதிரிப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி இதுவரை 22 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

07 நோயாளிகள் காந்திநகர், சபர்கந்தா-ஹிமத்நகர், படான், ராஜ்கோட் மற்றும் பவநகர் ஆகிய நகரங்களிலுள்ள வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வைரஸைப் பரப்பும் மணல் ஈக்களை ஒழிக்கும் பொருட்டு, வீடுகளின் மண் சுவர்களில் உள்ள விரிசல்கள் மற்றும் பிளவுகளை அடைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடைகள் வளர்க்கப்படும் பகுதிகளைச் சுற்றித் தீவிர பூச்சிக்கொல்லி மருந்துத் தெளிப்புப் பணிகள் களப்பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல உறுப்புகள் செயலிழப்பதைத் தடுக்கும் வகையில், அறிகுறிகளுடன் வரும் குழந்தைகளை உடனடியாக ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதி கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்க அரசு மற்றும் தனியார் சிறுவர் வைத்தியசாலைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18
news-image

‘ஏர் இந்தியா’ விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள்...

2026-08-14 14:16:43
news-image

சீனாவின் C919 விமானம் முதன்முறையாக சர்வதேச...

2026-08-14 14:25:24
news-image

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே...

2026-08-14 13:03:18
news-image

ஜப்பானில் கடும் மழை: நரிட்டா விமான...

2026-08-14 12:35:25
news-image

வயது அதிகரிப்பதற்காக அவசரப்பட்டு திருமணம் செய்யக்...

2026-08-14 12:14:55
news-image

கடந்த ஒரு மாதமாக குளத்திலேயே வாழும்...

2026-08-14 12:03:02
news-image

இந்தியாவில் ஆபாச வீடியோ அழைப்பு மையம்...

2026-08-14 11:50:33
news-image

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: மத்திய...

2026-08-14 10:31:49
news-image

சிறுமி மீதான மனிதக் கடத்தல், பாலியல்...

2026-08-14 10:54:38
news-image

கொங்கோவில் எபோலாவால் 2,000 பேர் உயிரிழப்பு...

2026-08-13 17:36:33