சர்­வ­தேச கடற்­ப­ரப்பில் காணப்­படும் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலை முறி­யடிக்க பிராந்­திய நாடு­களின் ஒத்­து­ழைப்பு மற் றும் அனு­பவப் பகிர்வு அவ­சியம். இலங்­கையின் பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டித்த அனு­பவம் எமக்கு உள்ள போதிலும் சர்­வ­தேச ரீதியில் இன்று சகல நாடு­களும் முகங்­கொ­டுத்து வரும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை அனை­வரும் இணைந்தே முறி­ய­டிக்க வேண்டும்  என்று கடற்­படை தள­பதி ரியல் அட்­மிரல் ட்ரெவிஸ் சின்­னையா தெரி­வித்தார். 

இலங்கை கடற்­ப­டையின் ஏற்­பாட்டில் எட்­டா­வது தட­வை­யா­கவும் நடத்­தப்­படும் காலி கலந்­து­ரை­யாடல் சர்­வ­தேச கடற்­படை பாது­காப்பு  மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்­ப­மா­கி­யது.   அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

  யுத்தம் முடி­வுக்கு வந்­ததில் இருந்து கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்­தப்­படும் இந்த கடற்­படை மாநாடு எட்­டா­வது தட­வை­யாக கொழும்பில் நடத்­தப்­ப­டு­கின்­றது.  இந்த மாநாட்டில் இலங்­கையின் கடற்­படை தள­பதி உள்­ளிட்ட பாது­காப்பு படை­களின் பிர­தா­னிகள், தள­ப­திகள் மற்றும் முப்­படை உயர் அதி­கா­ரிகள் கலந்­து­கொண்­ட­துடன் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க மற்றும் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன ஆகியோர்  சிறப்பு அதி­தி­க­ளாக கலந்­து­கொண்­டனர். அத்­துடன் சர்­வ­தேச நாடு­களின் தூது­வர்­களும் புத்­தி­ஜீ­வி­களும் மாநாட்டில் கலந்­து­கொண்­டனர். 

மேலும் நேற்­றைய மாநாட்டின் போது முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க மற்றும் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன ஆகி­யோ­ருக்கு நிகழ்வில் கலந்­து­கொண்­ட­தற்­கான கடற்­படை நினைவுச் சின்­னங்­களை கடற்­படை தள­பதி ரியல் அட்­மிரல் ட்ரெவிஸ் சின்­னையா வழங்­கி­யி­ருந்தார். 

 இந்த மாநாட்டில்  இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா, ஜப்பான், பிரித்­தா­னியா, பாகிஸ்தான் உள்­ள­டங்­க­லாக 51 சர்­வ­தேச நாடு­களின் கடற்­படை பிர­தி­நி­நி­தி­களும், 12 சர்­வ­தேச அமைப்­பு­களும் கலந்­து­கொண்டன.   

இன்றும் தொடரும்  இந்த கடற்படைமாநா­டா­னது இம்­முறை கடல்சார் பாது­காப்பில் சர்­வ­தேச நாடு­களின் பங்­க­ளிப்பு என்ற மையக் கருத்தினை கொண்டு இடம்­பெ­று­கின்­றது.  காலி கலந்­துரை­யாடல் மாநாட்டில் உரை­யாற்­றிய கடற்­படை தள­பதி ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்­னையா உரை­யாற்­று­கையில் கூறி­ய­தா­ வது, 

இந்து சமுத்­தி­ரத்தின் பாது­காப்பில் இலங்கை கடற்­படை மிகவும் அவ­தா­ன­மா­கவும் பூரண ஒத்­து­ழைப்பின் மூல­மா­கவும்  ஏனைய நாடு­க­ளுடன் இணைந்து செயற்­பட்டு வரு­கின்­றது. குறிப்­பாக  இந்து சமுத்­தி­ரத்தில் பாது­காப்­பான பய­ணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்­கு­வ­ரத்தை மேற்­கொள்ள உலக நாடுகள் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்டும் என்ற நிலைமை உள்­ளது. அதனை மீறாது நாம் செயற்­பட்டு வரு­கின்றோம்.   அத்­துடன் இந்து சமுத்­தி­ரத்தில் இலங்கை முக்­கிய மைய­மாக  அமைந்­துள்­ள­துடன், கப்பல் போக்­கு­வ­ரத்தில் தவிர்க்க முடி­யாத ஒரு நாடாக  காணப்­ப­டு­கின்­றது. இலங்­கை­யினை அடிப்­ப­டையாக வைத்தே இந்­தியா, சீனா உள்­ளிட்ட பாரிய நாடு­களும் ஏனைய நாடு­களும் செயற்­பட்டு வரு­கின்­றன . ஆகவே அவர்­க­ளுக்­கான ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கு­வதன் மூல­மாக நட்­பு­றவு ரீதியில் நாம் செயற்­ப­டு­கின்றோம். 

மேலும் சர்­வ­தேச கடற்­ப­ரப்பில் காணப்படும் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலை முறி­யடிக்க பிராந்­திய நாடு­களின் ஒத்­து­ழைப்பு, மற்றும் அனு­பவப் பகிர்வு அவ­சியம். இலங்­கையின் பயங்கரவாதத்தை முறியடித்த அனுபவம் எமக்கு உள்ள போதிலும் சர்வதேச ரீதியில் இன்று சகல நாடுகளும் முகங்கொடுத்து வரும் பயங்கரவாத செயற்பாடுகளை அனைவரும் இணைந்தே முறியடிக்க வேண்டும்.  இந்து சமுத்திர பகுதியில் சமாதானமான மற்றும்  அச்சுறுத்தல் அற்ற, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.