மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

03 Aug, 2026 | 05:38 PM
image

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா இன்று (3) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலய உற்சவப் பெருவிழாவின் துவசாரோகண உற்சவம் இன்று நடைபெறுகிறது.

மூலமூர்த்திக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்ற சிறப்புப் பூஜை வழிபாடுகளை அடுத்து, வசந்த மண்டபத்திலிருந்து உற்சவ மூர்த்தி சர்வ அலங்காரங்களுடன் கொடிஸ்தம்பம் அமையப்பெற்றுள்ள இடத்திற்கு எழுந்தருளினார்.

பின்னர் கொடிஸ்தம்பத்திற்குச் சிறப்பு அபிஷேக பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத தேவாரப் பாராயணங்கள் இசைக்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நடந்தேறியது.

மாமாங்கேஸ்வரரின் கொடியேற்றத்தைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

அமிர்தகழி மாமாங்கேஸ்வரரின் தீர்த்த உற்சவப் பெருவிழா ஆடி அமாவாசை தினமான எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50