இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை விரிவுபடுத்த JKCG Auto - Green EV இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

03 Aug, 2026 | 02:55 PM
image

இலங்கையில் BYD மற்றும் Denza வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto), தனது வாடிக்கையாளர்களுக்கான சார்ஜிங் உட்கட்டமைப்பை நாடளாவிய ரீதியில் கணிசமாக விரிவாக்கும் நோக்கில் கிரீன் ஈவி (Green EV) நிறுவனத்துடன் கடந்த ஜுன் 26ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையில் ஒரு விரிவான மற்றும் நம்பகமான புதிய சக்தி வாகன (NEV) சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான JKCG Auto நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்தக் கூட்டாண்மையின் மூலம், BYD மற்றும் Denza வாகன உரிமையாளர்கள், கிரீன் ஈவி நிறுவனத்தின் 100 க்கும் மேற்பட்ட DC அதிவேக சார்ஜர்கள் மற்றும் 70 AC சார்ஜர்களைக் கொண்ட பொது சார்ஜிங் வலையமைப்பை தடையின்றி பயன்படுத்த முடியும்.

20 மாவட்டங்கள் மற்றும் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய இந்த வலையமைப்பு, வடக்கே யாழ்ப்பாணம் முதல் தெற்கே ஹம்பாந்தோட்டை வரையிலும், வடமேற்கு கடற்கரையில் உள்ள புத்தளம் முதல் கிழக்கு கடற்கரையில் உள்ள திருகோணமலை மற்றும் அம்பாறை வரையிலும் பரந்து விரிந்துள்ளது. இதில் 40kW, 60kW மற்றும் 120kW அதிவேக சார்ஜிங் உட்கட்டமைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கொழும்பின் மையப்பகுதியாக இருந்தாலும் சரி, அல்லது புறநகர் மற்றும் தூரப் பிரதேசங்களாக இருந்தாலும் சரி, வாடிக்கையாளர்கள் தடையின்றியும் நம்பிக்கையுடனும் சார்ஜ் செய்வதை உறுதி செய்யும் வகையில் இந்த வலையமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் மின்சார வாகனப் பயன்பாட்டிற்கு இருக்கும் முக்கிய தடைகளில் ஒன்றான சார்ஜிங் பற்றாக்குறையை நீக்குகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், கிரீன் ஈவி நிறுவனம் ஸ்ரீலங்கா இன்ஷுவரன்ஸ் (SLIC) நிறுவனத்துடன்இணைந்து ஒவ்வொரு சார்ஜிங் நிலையத்திற்கும் 100 மில்லியன் ரூபா பெறுமதியான விரிவான காப்புறுதிப் பாதுகாப்பையும் வழங்கியுள்ளது. இது ஏற்படக்கூடிய சேதங்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதோடு, ஒவ்வொரு பயனருக்கும் முழுமையான மன அமைதியை உறுதி செய்கிறது.

உலகத்தரம் வாய்ந்த மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமன்றி, அன்றாட வாகனப் பயன்பாட்டின் நடைமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நம்பகமான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதன் மூலம், இலங்கையின் நிலையான நடமாட்டத்திற்கான (Sustainable Mobility) மாற்றத்தை உறுதி செய்யும் JKCG Auto நிறுவனத்தின் பரந்த மூலோபாயத்தை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது.

இது குறித்து JKCG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்துத் தெரிவிக்கையில், 'இலங்கையின் எதிர்கால போக்குவரத்து மின்சார வாகனங்களை சார்ந்ததாக அமைய வேண்டுமாயின், அதற்கான வாகனங்களையும் அதற்குத் தேவையான சார்ஜிங் உட்கட்டமைப்பு வசதிகளையும் நாம் எவ்வளவு எளிதாக மக்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம் என்பதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது.

வாகன ஓட்டுநர்களின் தூரம் குறித்த அச்சத்தை போக்குவதற்கும், கொழும்பில் அல்லது இலங்கையின் எந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளரும் நம்பிக்கையுடன் மின்சார வாகனங்களை நோக்கி மாறுவதை உறுதி செய்வதற்கும், கிரீன் ஈவி போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட நிறுவனங்களுடன் கைகோர்ப்பதில் JKCG Auto பெருமிதம் கொள்கிறது,' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், 'கிரீன் ஈவி நிறுவனத்துடனான எமது கூட்டாண்மை, வாடிக்கையாளர்களின் அந்த நம்பிக்கையில் செய்யப்படும் நேரடி முதலீடாகும். நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட அதிவேக சார்ஜர்கள் மற்றும் இலங்கையின் முதலாவது 120kW அதிவேக DC சார்ஜர்கள் மூலமாக, எமது BYD மற்றும் ; DENZA வாடிக்கையாளர்களுக்கு இலங்கையின் மிகவும் திறமையான மற்றும் பரந்த சார்ஜிங் வலையமைப்புகளுக்கான அணுகல் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். ஒரு நடைமுறை EV சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது என்பது இதுதான்,' எனக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு BYD வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து JKCG Auto நிறுவனம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான சுற்றுச்சூழல் முதலீடுகளில் இந்த கிரீன் ஈவி நிறுவனத்துடனான கூட்டாண்மை சமீபத்தியதாகும். இந்நிறுவனம் ஏற்கனவே நாடு தழுவிய ரீதியில் 100 க்கும் மேற்பட்ட DC அதிவேக சார்ஜர்களை நிறுவியுள்ளதுடன், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நிலையான 7kW ஹோம் சார்ஜரையும் வழங்கி வருகிறது.

இதன் மூலம் வாகனங்களை வீட்டிலேயே சார்ஜ் செய்யத் தொடங்கி, தடையின்றி தொடர்ந்து பயணிப்பதை உறுதி செய்கிறது. இந்த கட்டமைப்பில் மேலும் 125 க்கும் மேற்பட்ட கிரீன் ஈவி சார்ஜர்கள் இணைக்கப்படுவது, BYD மற்றும் DENZA வாகனங்களைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகன வாகனங்களை வாங்குவது மிகவும் நடைமுறையான மற்றும் மன அழுத்தமில்லாத ஒரு தெரிவு என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டில் பதிவாகியுள்ள மொத்த மின்சார வாகனங்களில் சுமார் 70% சந்தைப் பங்கை BYD கொண்டுள்ளது. மேலும், JKCG Auto நிறுவனம் தனது சேவைகளைத் தொடங்கியதில் இருந்து இதுவரை 26,500-க்கும் மேற்பட்ட வாகனப் பராமரிப்புச் சேவைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது வாகன பயன்பாட்டின் அளவை மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் இந்த வர்த்தக நாமம் மற்றும் அதன் உள்ளூர் ஆதரவு வலையமைப்பு மீது வைத்துள்ள நம்பிக்கையையும் வெளிக்காட்டுகிறது. கொழும்பு, வத்தளை, கண்டி, காலி, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் உள்ள சேவை நிலையங்கள் மற்றும் சீதுவையில் அமைந்துள்ள இலங்கையின் மிகப்பெரிய பிரத்தியேக Body shop ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மிகச்சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றன.

JKCG Auto மற்றும் கிரீன் ஈவி இடையிலான இந்த கூட்டாண்மை, இலங்கையின் நிலையான உட்கட்டமைப்பு சார்ந்த புதிய போக்குவரத்துப் புரட்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. தற்போதைய நிலையில் 100-க்கும் மேற்பட்ட சார்ஜர்கள் பயன்பாட்டில் உள்ளதோடு, இந்த கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான கூட்டு அர்ப்பணிப்புடன் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44