முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பொங்கல் உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) ஆரம்பமாகி, இன்று திங்கட்கிழமை (03) அதிகாலை மிகச் சிறப்பாக நிறைவடைந்துள்ளது.
பல்வேறு சர்ச்சைகள், நெருக்கடிகள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தில் வழிபாட்டு நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையிலேயே நடப்பாண்டிற்கான பொங்கல் பெருவிழா உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
நேற்று காலையில் விசேட அபிஷேக பூஜைகள் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து மதியப் பூஜை வழிபாடுகளின் பின்னர் அடியார்களுக்குப் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டன.
இப்பொங்கல் விழாவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உட்படப் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டு எம்பெருமானின் அருளாசியைப் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து அன்று மாலை வேளையில், நாயாறு முனியப்பர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு, கச்சை நேர்ந்து, மடை பரவி, வளர்ந்து நேர்ந்து பொங்கிப் படைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. விசேட பூஜைகளைத் தொடர்ந்து பரிகளம் வழிவிடுதலுடன் இன்று (03) அதிகாலை பொங்கல் உற்சவம் இனிதே நிறைவுற்றது.
குறித்த பொங்கல் நிகழ்வின் போது கடந்த ஆண்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பான கட்டளையைக் கொக்கிளாய் பொலிஸார் காட்சிப்படுத்தியிருந்ததுடன், பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இருப்பினும் எவ்வித இடையூறுகளுமின்றி 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல் விழா பக்தர்களின் பெருந்திரளான பங்கேற்புடன் அமைதியான முறையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM