(க.சிவலிங்கமூர்த்தி)
மலையக எழுத்தாளரும் கல்வியலாளருமான கந்தையா கணேசமூர்த்தி எழுதிய சுக்கிலபட்சம் கவிதை நூல் வெளியீட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை (02) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
முன்னாள் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் கவிஞர் சு.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இவ் சுக்கிலபட்சம் நூல் வெளியீட்டு விழாவில் ஓய்வுநிலை பேராசிரியர் சபா ஜெயராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சை ஆணையாளர் சு.விஸ்வநாதன், மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் தை. தனராஜ், ஏபி டிராவல்ஸ் உரிமையாளர் ஜே.வி.எஸ். விஜயன், இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் ஆகிய முக்கியஸ்தர்களின் பங்கேற்புடனும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இளங்கலை சிறப்புப் பட்டம், முதுகலை ஆசிரியர் கல்வி கணக்காய்வுப் பட்டயம், கல்வி நிர்வாகவியல் பட்டயம், தொடர்பாடல் கல்விப் பட்டயம் மற்றும் கல்வி மேலாண்மையில் முதுகலை பட்டம் உள்ளிட்ட உயர்கல்வித் தகுதிகளைக் கொண்ட நூலாசிரியர் கந்தையா கணேசமூர்த்தியினால், தேசிய நூலக ஆவணாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ள இந்நூல், இவரது 2 ஆவது கவிதைப் படைப்பாகும்.
கடந்த 2010 ஆம் ஆண்டு அரச சாகித்திய விருது பெற்ற இவரது முதலாவது கவிதை நூலான தழலாடிவீதி வெளியாகி 16 வருடங்களின் பின்னர் இந்த சுக்கிலபட்சம் கவிதை நூல் வெளியிடப்பட்டது.
இந்நூல் 2025 ஆம் ஆண்டு இலங்கை தேசிய நூலக ஆவணாக்கல் சபை நடத்திய கையெழுத்துப் பிரதிப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், மதுரை தமிழ் நட்பு வட்டம் உலகளாவிய ரீதியில் நடத்திய கவிதை போட்டியில் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதோடு இந்நூலின் அறிமுக விழா எதிர்வரும் 23 ஆம் திகதி புஸ்ஸல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM