வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் இலங்கையின் முதலாவது வாகன பேரணிக்கு CDB அனுசரணை

02 Aug, 2026 | 02:27 PM
image

இலங்கையின் வாகனத் துறையின் எதிர்காலத்தை விரைவுபடுத்தவும் அதனை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கிலும், Citizens Development Business Finance PLC (CDB), இலங்கை மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்துடன் (Ceylon Automobile Importers Association) ஒரு மூலோபாயக் கூட்டாண்மையில் கைச்சாத்திட்டுள்ளது.

இதன்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க 'இலங்கை மோட்டார் வாகன இறக்குமதியாளர்களின் 2026 வாகன பேரணி ‘Ceylon Automobile Importers’ Motor Rally 2026’ நிகழ்வின் பிரதான பங்காளராக CDB நிறுவனம் இணைந்துள்ளது. இச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் முதலாவது மோட்டார் வாகன பேரணியான இந்நிகழ்வு, 2026 ஓகஸ்ட் 16 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் ஆரம்பமாகி வோட்டர்ஸ் எட்ஜ் வளாகத்தில் நிறைவடையவுள்ளது.

இந்த மோட்டார் வாகன பேரணியில், இச்சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட முன்னணி வாகன இறக்குமதியாளர்களின் சூப்பர் கார்கள், சொகுசு வாகனங்கள், பிரீமியம் ரக இறக்குமதி வாகனங்கள் உள்ளிட்ட 200 இற்கும் மேற்பட்ட வர்த்தகநாமங்களின் வாகனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இந்த வாகனப் பேரணியனாது கொழும்பின் பிரதான வீதிகளான டுப்ளிகேஷன் வீதி, மொரட்டுவை, பொரலஸ்கமுவை, கொஹுவலை, இராஜகிரிய ஆகிய இடங்கள் ஊடாக, முக்கிய வாகன விற்பனை மையங்களைக் கடந்து, நிறைவிடத்தை அடையவுள்ளது.

இந்தக் கூட்டாண்மை குறித்து CDB நிறுவனத்தின் விற்பனை மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சசிந்திர முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோட்டார் வாகன பேரணியை வலுவூட்டுவதில் இலங்கை மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்துடன் CDB கைகோர்த்துள்ளது. இச்சங்கத்துடன் இணைந்து, இலங்கை முழுவதும் வாகன உரிமையை ஏற்படுத்துவதை ஊக்குவிப்பதிலும், போக்குவரத்துத் தீர்வுகளுக்கான அணுகலை அதிகரிப்பதிலும் நாம் முன்னின்று செயற்படுகிறோம்.

முற்போக்கான நிதித் தீர்வு வழங்குனர் எனும் வகையில், புத்தாக்கமான நிதித் தயாரிப்புகள் மூலம் போக்குவரத்துக்கான அணுகலை எளிதாக்கும் அதே வேளையில், மோட்டார் வாகனத் துறையின் வளர்ச்சியை ஆதரிக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம். இந்த வாகன பேரணியானது வெறுமனே வாகனங்களை கொண்டாடும் நிகழ்வு மட்டுமல்லாமல், இத்துறையின் பரிணாம வளர்ச்சி, நெகிழ்ச்சித் தன்மை மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளுக்கான ஒரு ஆதாரமாகவும் அமைகின்றது.” என்றார்.

அவரது கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட, மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனகே, “CDB நிறுவனத்தின் ஆதரவுடன் நடைபெறும் இலங்கை மோட்டார் வாகன இறக்குமதியாளர்களின் வாகனப் பேரணியானது, இலங்கையின் மோட்டார் வாகனத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.

CDB மற்றும் எமது ஏனைய பங்காளர்களின் ஆதரவுடன், முன்னணி வர்த்தகநாமங்களையும் வாகன ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து, சொகுசு, செயல்திறன், புத்தாக்கங்களை வெளிப்படுத்தும் ஒரு துடிப்பான தளத்தை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது. இத்துறையை உயர்த்தவும், பொதுமக்களுக்கு ஈர்க்கக்கூடிய அனுபவங்களை உருவாக்கவுமான, எமது பணியை இக்கூட்டாண்மை மேலும் பலப்படுத்துகிறது.” என்றார்.

வாகன இறக்குமதியாளர்களின் 2026 மோட்டார் வாகன பேரணி, நாட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மோட்டார் வாகன நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இலங்கையின் வாகனத் துறையின் பரிணாம வளர்ச்சியைக் கொண்டாடும் அதே வேளையில், நாட்டின் முன்னேற்றம் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரு நம்பிக்கையான பங்காளராக CDB இன் பங்கை மேலும் உறுதிப்படுத்துகிறது.

சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் பைனான்ஸ் பிஎல்சி (CDB) இலங்கையில் முன்னணிலுள்ள நான்கு மிகப் பெரும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் (NBFIs) ஒன்றாகத் திகழ்கிறது. நிதிச் சேவைகளில் புத்தாக்கம், நிலைபேறான தன்மைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான பெருநிறுவன ஆளுகை ஆகியவற்றிற்காக CDB சிறந்து விளங்குகின்றது. டிஜிட்டல் மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு, நிலைபேறான வளர்ச்சி இலக்குகளுடன் ஒத்துப் போகின்ற அதிநவீன தீர்வுகளை வழங்குவதன் மூலம் நிதிச் சேவைத் துறையை தொடர்ச்சியாக CDB நிறுவனம் மீள்வரையறை செய்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44