மட்டக்களப்பு பெரிய ஊறணிப் பகுதியில் பூட்டிய வீடு ஒன்றின் கூரையை கழற்றி அங்கிருந்த 6 இலட்சம் ரூபா மற்றும் தொலைக்காட்சி, தங்கநகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக  பொலிசார் தெரிவித்தனர்.

பெரிய ஊறணி, செல்வநாயகம் வீதியில் உள்ள குறித்த வீட்டின் உரிமையாளர்கள் உறவினர் ஒருவரின் இறந்த வீட்டிற்கு வீட்டை பூட்டிவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை சென்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பி வந்து வீட்டின் கதவை திறந்தபோது அங்கு விட்டின் கூரை கழற்றப்பட்டு அங்கிருந்த 42 அங்குல எல் ஈ டீ தொலைகாட்சிப் பெட்டி , 4 ரோச்லைற், 6 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் ஆகியன கொள்ளையிடப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து தடையவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மட்டு தலைமையக பொலிசார்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.