தொழிலில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான சூட்சம குறிப்பு..!

01 Aug, 2026 | 05:06 PM
image

எம்மில் பலரும் அரும்பாடு பட்டு வங்கிகளில் கடனுதவி பெற்று விற்பனை நிலையத்தை தொடங்கி தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். தொழில் சிறப்பாக நடைபெற்று லாபம் வந்து கொண்டிருந்தால் மகிழ்ச்சி நீடிக்கும். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வணிகமோ லாபமோ கிடைக்கவில்லை என்றால் மனதில் இனம் புரியாத அச்சம் எழும். கடன் - நஷ்டம் - மன உளைச்சல்-  போன்ற விடயங்கள் அடுத்தடுத்து நடக்கத் தொடங்கும்.

இத்தகைய கெடு பலன்கள் நடக்காமல், தொழிலை சீராகவும், சிறப்பாகவும் நடைபெறுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில எளிய விடயங்களை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறார்கள்.  

பொதுவாக நாளாந்தம் நாம் விற்பனை நிலையத்தில் விற்பனையை தொடங்கும் முன் இறைவழிபாட்டை மேற்கொள்வது இயல்பு. இத்தகைய தருணத்தில் உங்களுக்கான இறை வழிபாட்டின் போது நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறீர்களோ அந்த லக்னத்திலிருந்து பத்தாம் இடத்திற்குரிய தெய்வங்களின் திருவுருவ புகைப்படத்தை இடம்பெறச் செய்து, அதனை நம்பிக்கை உடன் வழிபட தொடங்கினால் தொழிலில் தடைகள் ஏதும் வராமல், நன்றாக நடந்து, நஷ்டம் இல்லாமல் லாபம் வரத் தொடங்கும்.

அவை தொடர்ந்து நீடிக்கவும் செய்யும். இந்நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான லக்னக்காரர்கள் தங்களுடைய விற்பனை நிலையத்தில் இடம்பெறச் செய்ய வேண்டிய தெய்வங்களின் திருவுருவ புகைப்படத்தை பற்றிய பட்டியலை தொடர்ந்து காண்போம்.

மேஷம் - ஆஞ்சநேயர் மற்றும் ஐயப்பனின் திருவுருவ புகைப்படங்கள்.

ரிஷபம் - பிரத்தியங்கிரா தேவியின் திருவுருவ புகைப்படம்

மிதுனம் -  18 சித்தர்களின் திருவுருவ புகைப்படங்கள்.

கடகம் - ராஜ அலங்காரத்தில் உள்ள முருகனின் திருவுருவ புகைப்படம்

சிம்மம் - மகாலட்சுமியின் திருவருவ புகைப்படம்

கன்னி - திருப்பதி ஏழுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் திருவுருவப் புகைப்படம்

துலாம்- தட்சிணாமூர்த்தியின் திருவுருவ புகைப்படம்

விருச்சிகம் - லட்சுமி நரசிம்மரின் திருவுருவ புகைப்படம்

தனுசு - விநாயகர் மற்றும் மகாவிஷ்ணுவின் திருவுருவ புகைப்படங்கள்.

மகரம் - ஸ்ரீ கால பைரவரின் திருவுருவ புகைப்படம்

கும்பம் -  ஆகர்ஷண பைரவரின் திருவுருவ புகைப்படம்

மீனம் - சிவனும், சக்தியும் சேர்ந்திருக்கும் திருவுருவ புகைப்படம்

மேலே குறிப்பிடப்பட்ட தெய்வத்தின் திருவுருவ படங்களுக்கு நாளாந்தம் உங்கள் விருப்பத்திற்குரிய பூவை சாற்றி கல்கண்டை நிவேதனமாக படைத்து வணங்கி வந்தால்  தொழில் சிறக்கும்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21
news-image

கணவன் - மனைவி இடையே உள்ள...

2026-08-29 15:43:45
news-image

மனதிற்கினிய வாழ்க்கைத் துணை அமைவதற்கான எளிய...

2026-08-28 16:57:23
news-image

ராகு தோஷத்தை நீக்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-27 16:32:55
news-image

மகாலட்சுமி வழிபாடு : சில சூட்சமங்கள்

2026-08-26 16:50:28
news-image

தனவரவு தங்குதடையின்றி கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-08-25 17:21:17
news-image

உறவுகளின் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் பிரத்யேக...

2026-08-24 16:27:53