எம்முடைய உடலில் கொழுப்புகள் உள்ளது என்பதை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அந்தக் கொழுப்புகளில் பழுப்பு வண்ண கொழுப்பு என்ற ஒன்று உள்ளது என்பதை எம்மில் சிலர் மட்டுமே அறிந்திருப்பார்கள். இதனுடைய பயன்பாடு குறித்து எம்முடைய வைத்தியர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.
ஒவ்வொருவருடைய உடலிலும் வெள்ளை நிற கொழுப்புகளை போலவே அளவில் குறைவாக பழுப்பு வண்ண கொழுப்பும் உள்ளது. இத்தகைய பழுப்பு வண்ண கொழுப்பு - குளிரால் நீங்கள் நடுங்கும் போது, உங்களுடைய உடலில் உள்ள குருதியின் வெப்பநிலையை அதிகரிப்பதற்கு தேவையான வெப்பத்தை இந்த பழுப்பு வண்ண கொழுப்பு மேற்கொள்கிறது.
நீங்கள் நடுங்க தொடங்குவதற்கு சிறிது நேரம் முன்.. பழுப்பு நிற கொழுப்பு செயல்பட்டு, இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளை உடைத்து வெப்பத்தை உண்டாக்குகிறது. இதனால் எம்முடைய உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படுகிறது. நடுக்கமும் குறைகிறது.
பழுப்பு வண்ண கொழுப்பு - ஆற்றலை சேமித்து வைப்பதுடன் உங்கள் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. இதன் காரணமாக உங்களுடைய ரத்த சக்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவையும் கட்டுப்படுத்த இது உதவுகிறது.
பொதுவாக பழுப்பு நிற கொழுப்பு மிகச்சிறிய மூலக்கூறுகளால் ஆனது. உங்களுடைய உடலில் கொழுப்புகள் அதிகரிக்கும் போது.. அதன் மூலக்கூறுகள் ஒன்றாக திரண்டு, ஒரு கட்டியை உருவாக்குகின்றன. அதில் பழுப்பு நிற கொழுப்பு நீள் வட்ட வடிவில் காணப்படுகிறது.
இதை மருத்துவ மொழியில் மைட்டோகாண்ட்ரியா எனும் செல்களால் நிரம்பி இருப்பதால் பழுப்பு வண்ணத்தை கொண்டிருக்கிறது என்றும் , மைட்டோகாண்ட்ரியா என்பது அதிக அளவு இரும்புச் சத்தை கொண்டது என்றும் குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக இத்தகைய பழுப்பு வண்ண கொழுப்பு முதுகு, கழுத்து, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது. இதன் அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இருப்பினும் ஒருவரது உடல் எடையில் இரண்டு முதல் ஐந்து சதவீதம் வரை மட்டுமே பழுப்பு வண்ண கொழுப்பு இருக்கும். அதிலும் குறிப்பாக மற்றவர்களை விட ஒல்லியாக இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு இத்தகைய பழுப்பு வண்ண கொழுப்பு கூடுதலாக இருக்கும்.
வைத்தியர் ரவி கிரண்
தொகுப்பு அனுஷா.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM