கர்ம வினைகளின் தாக்கத்தை அளிப்பதற்கான பிரத்யேக வழிபாடு...!

31 Jul, 2026 | 05:00 PM
image

ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் சுபத்துவமாக இல்லாமல்... பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களால் எந்த ஒரு காரியத்திலும் தீரமாக செய்து நிறைவேற்றிட இயலாது. இவர்கள் இந்த பிறவியில் பெற்றிருக்கும் கர்ம வினை காரணமாக சோம்பலுடனும் நினைத்த காரியத்தை அதற்குரிய வழிமுறைகள் தெரிந்தாலும்.. அதனை நடைமுறைப்படுத்துவதில் விவரிக்க இயலாத கோணங்களில் இருந்து தடைகளை எதிர்கொள்வர்.

இதன் காரணமாக இவர்களுக்கு வெற்றி என்பது எளிதாக கிடைப்பதில்லை. அத்துடன் தோல்வி என்பதும் தொடர்கதையாக நீடிக்கும். அத்துடன் வயிற்றுப்புண் என்ற பாதிப்பிற்கும் முகம் கொடுப்பார்கள். இத்தகைய தருணங்களில் இது போன்ற சூழலில் இருந்து விடுபட்டு, எம்முடைய கர்ம வினைகளின் தாக்கத்தை அழித்து, சுப பலனை பெற வேண்டும் என்றால்... அதற்கு எம்முடைய முன்னோர்கள் பிரத்யேக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என முன்மொழிந்திருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : சந்தனம், பச்சரிசி மாவு, சிவப்பு வண்ண வஸ்திரம், சிவப்பு வண்ண பூக்கள், நெய்.

உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் ஆலயத்திலோ அல்லது சிவாலயத்திலோ தனி சன்னதியுடன் அருள் பாலிக்கும் வீர பத்திரரை காலை வேளையில் செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஓரை தருணங்களில் விரதம் இருந்து பச்சரிசி மாவு மற்றும் சந்தன அபிஷேகம் செய்து சிவப்பு வண்ண வஸ்திரம் சாற்றி சிவப்பு வண்ண மாலையை சூட்டி உருக்கிய நெய்யை நிவேதனமாக படைத்து வீரபத்திரரை மனம் ஒன்றி பிரார்த்தித்தால்bஉங்களுடைய கர்ம வினை நீங்குவதையும், சுப பலன்கள் கிடைக்க தொடங்குவதையும் அனுபவத்தில் காணலாம்.

இத்தகைய வீரபத்திரர் வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து வீரபத்திரரை வழிபட்டால் வாழ்க்கையில் எதிர் பார்க்காத மாற்றங்கள் கிடைத்து, மகிழ்ச்சியுடன் முன்னேறலாம்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21
news-image

கணவன் - மனைவி இடையே உள்ள...

2026-08-29 15:43:45
news-image

மனதிற்கினிய வாழ்க்கைத் துணை அமைவதற்கான எளிய...

2026-08-28 16:57:23
news-image

ராகு தோஷத்தை நீக்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-27 16:32:55
news-image

மகாலட்சுமி வழிபாடு : சில சூட்சமங்கள்

2026-08-26 16:50:28
news-image

தனவரவு தங்குதடையின்றி கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-08-25 17:21:17
news-image

உறவுகளின் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் பிரத்யேக...

2026-08-24 16:27:53