குரல் வளை முடிச்சு அல்லது குரல் நாண் புண்கள் பாதிப்பிற்குரிய சிகிச்சை

31 Jul, 2026 | 04:37 PM
image

எம்மில் சிலர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று அவரது குரலின் ஒலி அளவில் மாற்றம் ஏற்படும். வேறு சிலருக்கு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தால் குரலில் சோர்வு ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உங்களுடைய குரல் நாண் அல்லது குரல் வளையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவதானிக்கலாம். இதற்கு தற்போது நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை பெறலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

குரல் கரகரப்பு - பேசும் போது குரலில் அசைவுகளிலும், குரல் ஒலியிலும் சமசீரற்ற நிலை- தொண்டை கரகரப்பு - குரலொலியை தற்காலிகமாக இழத்தல்- குரல் ஒலியுடன் மூச்சிரைப்பு கேட்பது- ஆகிய அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உங்களுடைய குரல் வளை புண்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம்.

மேடைப் பேச்சாளர்கள்- ஆசிரியர்கள்- பாடகர்கள்- சொற்பொழிவாளர்கள்- இணையதளத்தில் தொடர்ந்து விடியோவில் பேசுபவர்கள்- இவர்களுக்கு வாழ்வாதாரம் குரல் தான். குரலை தொடர்ந்து பாவிக்கும்போது குரல் வளையின் மேற்பகுதியில் புற்றுநோய் அல்லாத புண்கள் பாதிப்பு ஏற்படும். இத்தகைய தருணத்தில் குரல்வளையின் முன்பகுதியில் தோல் கடினமானதாக மாறிவிடும்.

அங்குள்ள திசுக்களில் வீக்கம் அல்லது கடினத்தன்மை உருவாகிவிடும். இவற்றால் குரல் ஒலியில் மாற்றங்கள் ஏற்படும். இந்த கட்டிகள் குரல் நாண்களின் இயல்பான அதிர்வை சீர்குலைக்கிறது. இதனால் பேசுவதையோ பாடுவதையோ இடையூறு செய்கிறது. இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் முதலில் பொதுவாக குரலுக்கு ஓய்வு கொடுங்கள் என்பதை மட்டும் அறிவுறுத்துவர்.

சிலருக்கு இத்தகைய குரல் வளை பகுதியில் ஏற்படும் புண்கள் தீங்கற்றவை என்றாலும் முறையான பரிசோதனை செய்து முழுமையான சிகிச்சையை பெறாவிட்டால் அவை நாட்பட்ட அசௌகரியத்தை ஏற்படுத்தும். இயல்பான அளவை விட அதிகமாக பேசுவது அல்லது தேவையற்ற இடங்களில் அதிக ஒலியுடன் பேசுவது அடிக்கடி தொண்டையை செருமுவது சுற்றுச்சூழல் காரணிகள் நெஞ்செரிச்சல் என பலவற்றை காரணங்களாக விவரிக்கலாம்.

இவர்களுக்கு பிரத்யேக பரிசோதனை செய்த பிறகு, குரலுக்கான சிகிச்சை வழங்கப்படுகிறது. குரல் நாண்- குரல் நாண் அதிர்வு - குரல் வளை-  ஆகியவற்றின் இயல்பு தன்மையை மீட்டெடுக்க நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் தருவர். வெகு சிலருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பு நாட்பட்டதாக நீடித்தால் சிறிய அளவிலான சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் அளிப்பர்.

வைத்தியர் கௌரி சங்கர்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் : சிறுநீரக பாதிப்பிற்கான...

2026-08-15 17:08:15
news-image

மலக்குடலில் ஏற்படும் கட்டிகளை அகற்றி நிவாரணமளிக்கும்...

2026-08-14 14:28:38
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-13 18:12:25
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எக்ஸ்ட்ராகார்போரியல்...

2026-08-13 18:14:22
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-08-12 16:05:53
news-image

சர்கோயிடோசிஸ் எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-08-11 16:51:59
news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41
news-image

தசை இறுக்கத்திற்கு நிவாரணமளிக்கும் பனிக்கட்டி குளியல்...

2026-08-04 15:26:44
news-image

ப்ரௌன் ஃபேட் எனும் பழுப்பு கொழுப்பு...

2026-08-01 17:00:28