தம்பலகாமத்தில் தமிழ் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் கூத்து ஆற்றுகை விழா

31 Jul, 2026 | 03:27 PM
image

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகம் இணைந்து நடத்திய கூத்து ஆற்றுகை விழா இன்று (31) தம்பலகாமம் தி/ஆதிகோனேஸ்வரா மகா வித்தியாலயத்தின் கலையரங்கத்தில் நடைபெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தலைவரும் தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி.விஜயகுமார், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ஐ.ஆர்.ஜி. நிமல் பண்டார, தம்பலகாமம் கோட்டக் கல்வி அதிகாரி இரா. ராஜாசுரேஷ், தம்பலகாமம் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான க. அன்பழகன், வ. ஜேசுபரன் உட்பட தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதில் தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையிலான பல்வேறு கலை கலாசார அம்சங்களும் நடனங்களும் நடைபெற்றன.

திருகோணமலை சிறீ கோணேஸ்வரா இந்து கல்லூரி மாணவர்களால் காத்தவராயன் சிந்து நடைக்கூத்து, வெருகல் இளம்பிறைக் கழகம் புலிக்கூத்து, திருகோணமலை அன்புவழிபுரம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களின் விசேட கூத்து என கூத்து ஆற்றுகை நடைபெற்றது.

இதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் கலை கலாசார அம்சங்கள் ஊடாக கலைகளை வளர்க்க இது போன்ற நிகழ்வுகள் பெரிதும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07