படப்பிடிப்பின் போது திடீரென நுழைந்த இளைஞனொருவர் ரகளையில் ஈடுபட்டதால் வவுனியா பேரூந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று  இரவு 11 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் வவுனியாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான வினோத்தின் இயக்கத்தில் ஈழத்து நாயகி மிதுனா நடிக்கும் ஆல்பம் ஒன்றின் காட்சிகள் படமாக்கப் பட்டுக்கொண்டிருந்தன. 

அப் பகுதிக்குள்  திடீரென நுழைந்த இளைஞனொருவர் தனக்கும் நடிக்க வாய்ப்பு தருமாறு தகராறில் ஈடுபட்டதுடன் பெரும் குழப்பத்தையும் உண்டுபண்ணியிருந்தார். 

இதனையடுத்து சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த  பொலிஸார் குறித்த இளைஞனை கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு  அழைத்துச் சென்றுள்ளனர்.