நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான எளிய குறிப்பு...!

30 Jul, 2026 | 05:19 PM
image

எம்முடைய இளைய தலைமுறையினர் சர்வதேச அளவில் திறமைகளை வளர்த்துக் கொண்டு இளமையிலேயே மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இதனால் தங்களது வாழ்க்கை நடைமுறையை கடந்த தசாப்தங்களில் வாழ்ந்த அவர்களது முன்னோர்களை விட ஆடம்பரம் - சுவைக்கு முக்கியம் தரும் உணவு முறை-  என வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டதால் விவரிக்க இயலாத பல வகையினதான ஆரோக்கிய கேடுகளுக்கு முகம் கொடுக்கிறார்கள்.

அதிலும் இந்த பராபவ ஆண்டில் குரு பெயர்ச்சி-  சனி பெயர்ச்சி- ராகு -கேது பெயர்ச்சி- ஆகியவை நிகழ்ந்தாலும் பெரும்பாலான மக்களுக்கு ஆரோக்கிய விடயத்தில் பாதிப்பை உண்டாக்கும். இதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான எளிய குறிப்பினை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் அருளியுள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் ரேவதி நட்சத்திரம் வரும் நாளன்று பஞ்சாங்கத்தை துல்லியமாக அவதானித்து ரேவதி நட்சத்திரம் நிறைவடையும் தருணத்திற்கு முன்னதான பனிரெண்டு நிமிடங்களையும் அஸ்வினி நட்சத்திரத்தின் தொடக்கத்தில் உள்ள பன்னிரண்டு நிமிடங்களையும் என மொத்தம் 24 நிமிடங்கள் சித்தர்களாலும் ஆன்மீக முன்னோர்களாலும் அமிர்தமான தருணம் என வரையறை செய்யப்பட்டு, இந்த தருணத்தில் ஒரு கோப்பை நீரை உங்களது பூஜை அறையில் வைத்து விட்டு, மனதால் அஸ்வினி குமாரர்களை ஒரு முகமாக தியானித்து, 24 நிமிடங்களுக்குப் பிறகு அந்த நீரை நீங்கள் அருந்தினால் அது நோய் தீர்க்கும் அரு மருந்தாகவும் நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்ளும் மருந்தாகவும் பயன்படும்.‌

சிலர் இதனை காத்திருந்து பொறுமையுடன் செய்ய முடிவதில்லை. இதனால் தான் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் மாற்று உபாயத்தையும் முன்மொழிந்திருக்கிறார்கள். இந்த பராபவ ஆண்டு முழுவதும் கருடாழ்வார் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

நாளாந்தம் காலையில் நீராடிய பிறகு பூஜை அறையில் கருட பகவானின் காயத்ரி மந்திரம் மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் காயத்ரி மந்திரத்தை ஏழு முறை உச்சரித்து கருடனை வழிபட்டால் உங்களுடைய உடலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். ஏதேனும் சுகவீனம் ஏற்பட்டிருந்தால் இந்த மந்திரத்தை உச்சரித்த பிறகு சாதாரண சிகிச்சை எடுத்தால் அந்த சிகிச்சை முழுமையாக பலன் அளிக்கும்.

உடனே எம்மில் சிலர் கருட பகவானின் காயத்ரி மந்திரம் மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் காயத்ரி மந்திரத்தை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துங்கள் என கேட்பர்.

கருடாழ்வாரின் காயத்ரி மந்திரம்...

ஓம் தத் புருஷாய வித் மஹே

சுவர்ண பட்சாய தீமஹி

தன்னோ கருட பிரசோதயாத்...!

ஸ்ரீ தன்வந்திரி பகவானின் காயத்ரி மந்திரம்...

ஓம் ஆரோக்யதாய வித் மஹே

அமிர்த கலச ஹஸ்தாய தீமஹி

கண்ணு தன்வந்திரி ப்ரசோதயாத்..!

இந்த இரண்டு மந்திரத்தையும் உச்சரித்து விட்டு, அதன் பிறகு பூஜை அறையில் நீங்கள் வைத்திருக்கும் நீரை பருகினால்.. நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21
news-image

கணவன் - மனைவி இடையே உள்ள...

2026-08-29 15:43:45
news-image

மனதிற்கினிய வாழ்க்கைத் துணை அமைவதற்கான எளிய...

2026-08-28 16:57:23
news-image

ராகு தோஷத்தை நீக்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-27 16:32:55
news-image

மகாலட்சுமி வழிபாடு : சில சூட்சமங்கள்

2026-08-26 16:50:28
news-image

தனவரவு தங்குதடையின்றி கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-08-25 17:21:17
news-image

உறவுகளின் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் பிரத்யேக...

2026-08-24 16:27:53